144 தடை உத்தரவு நேரத்தில் சுற்றித்திரிந்த வாலிபர்களுக்கு புத்தகம் கொடுத்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்..

144 தடை உத்தரவு நேரத்தில் சுற்றித்திரிந்த வாலிபர்களுக்கு புத்தகம் கொடுத்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நெடுஞ்சாலை பகுதியில் 144 ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிந்த வாலிபர்களுக்கு புத்தகம் கொடுத்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.

செங்கம் அடுத்த இறையூர், அம்மாபாளையம், முத்தனூர் ,முடியனூர், ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் ஏழைகளுக்கு அரிசி எண்ணெய் பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இடையில் அம்மாபாளையம் அருகே ஊரடங்கு மதிக்காமல் சாலையில் கூட்டமாக வந்த வாலிபர்களை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர் .அப்போது அந்த வழியாக வந்த கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தனது காரை நிறுத்தி விசாரித்தனர். அதற்கு வாலிபர்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது அதனால் விரைவில் சில மணி நேரம் பொழுதை கழிக்க வந்ததாக சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர் இதைக்கேட்ட அவர் அரசு உத்தரவை மதித்து கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும், தனித்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி தனது காரில் வைத்திருந்த புத்தகங்களை எடுத்து வாலிபர்களும் கொடுத்து வீட்டிலேயே இருந்து இந்த புத்தகத்தை படித்து பொழுதை கழியுங்கள் என்று கூறினார் .பின்னர் அப்பகுதி மக்களிடம் நிவாரண உதவி வழங்க சென்றார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் தவமணி, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, கவுன்சிலர்கள் ரமேஷ், ராஜன் , முன்னாள் கவுன்சிலர் துரைசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!