திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைப்பு..

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைப்பு..

திருவண்ணாமலை மாவட்டம்,தண்டராம்பட்டு வட்டம், கீழ்இராவந்தவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் விஜி வயது 22 என்பவர் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை தண்டராம்பட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தண்டராம்பட்டு வட்டம், பெருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அர்ஜுன் வயது 30 என்பவரும் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா,அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராமு@ராமசாமி என்பவரும் தொடர்ந்து கள்ளத்தனமாக அயல் மாநில மதுபாட்டில்களை கடத்தி விற்றுக் கொண்டிருந்தவர்களை தானிப்பாடி காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூவர் மீதும் தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் .பாரதி அவர்களின் வேண்டுகோளின்படியும், கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா பரிந்துரையின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திIPS அவர்களின் மேற்பரிந்துரையின்படியும், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!