கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் சேதமடைந்த வாழைகளைசட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் சேதமடைந்த வாழைகளை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் சேதமடைந்த வாழைகளை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

படவேடு, ராமநாதபுரம், தேவானங்குளம், மங்களாபுரம், அனந்தபுரம், வாழியூா் ஆகிய கிராமத்தில் பரவலாக விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனா். அண்மையில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.

சேதமடைந்த வாழை மரங்களை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிதம்பரம் கூறியதாவது: 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைகள் பலன் தரும் தருவாயில் சூறைக் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. இதில், 248 விவசாயிகள் மட்டும் பதிவு செய்துள்ளனா். பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 நிவாரணமாக வழங்கப்படும். பதிவு செய்யாத விவசாயிகளுக்கு அரசிடம் பாதிப்பு குறித்து தெரிவித்து நிவாரணம் பெற்றத் தரப்படும் என்றாா்

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!