வாழ்க்கையில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்; சந்திராயன்-3 ,திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மாணவர்களுக்கு அறிவுரை..
தி.மலை அடுத்த செங்கம் டவுன், சிகரம் பன்னாட்டு பள்ளியில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.நிகழ்விற்கு சிகரம் பள்ளியின் தாளாளர் முனைவர் கு.வணங்காமுடி அனைவரையும் வரவேற்று பேசினார். விஜிபி உலகத் தமிழ் சங்கம் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கி பள்ளி மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கி தலைமை உரையில் பேசும்போது ; உலகின் பல்வேறு நாடுகளிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளோம். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.
திருவள்ளுவரை உலகறிய செய்வதோடு, உலகம் முழுவதும் வாழும் தமிழ் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர் தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றவே இந்த முயற்சி. அவரது புகழை தமிழர்கள் கொண்டாட வேண்டும். அந்த வகையில் செங்கம் சிகரம் பன்னாட்டு பள்ளியில் 161 வது அய்யன் திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று பேசினார்
நிகழ்ச்சியின் முன்னதாக சிகரம் தாளாளர் முனைவர் கு.வணங்காமுடி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு சந்திராயன் 3 திட்ட இயக்குனர் அறிவியல் அறிஞர் முனைவர் வீரமுத்துவேல் சிலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் அவர் பேசும்போது, மாணவர்கள் ஒழுக்கத்துடன் ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் எந்த துறையாக இருந்தாலும் ஆர்வமுள்ள துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் தோல்விகளைக் கண்டு மனம் தளர வேண்டாம் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, வெற்றிக்கான படிக்கற்களாக மாற்ற வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையில் நீங்கள் சாதனை படைப்பீர்கள் என்று பேசினார். பெங்களூரு இஸ்ரோ திட்ட இயக்குனர் கா.தேன்மொழி செல்வி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கணேசர் குழும தலைவர் வழக்கறிஞர். கஜேந்திரன் கல்வியாளர் சி.மாணிக்கம், தலைமை ஆசிரியர்கள் அன்பழகன், ஜெயவேலு சாரண இயக்க பொறுப்பாளர் பாலகுமார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர் நிகழ்வின் முடிவில் சிகரம் பன்னாட்டு பள்ளியின் முதல்வர் காயத்ரி நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









