செங்கம் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன..

செங்கம் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பால் மற்றும் கரோனோ பீதி காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பொதுமக்கள் கொரோனா பீதியால் டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலும் மது பிரியர்கள் வராததால் வெறிச்சோடிக் காணப்பட்டன. செங்கம் சுற்று வட்டார கிராம புற பகுதிகளான பொது மக்களின் எதிர்ப்பால் வளையாம்பட்டு, தண்டா, ஆண்டிப்பட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. செங்கம் பகுதியிலுள்ள மற்ற 16 டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் வராததால் வெறிச்சோடி இருந்தன. தமிழக அரசு டாஸ்மாக் கடை உத்தரவு பிறப்பித்தையடுத்து செங்கம் பகுதியில் மதுபான விற்பனை குறைவாக உள்ளது. செங்கம் காவல்துறை ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.

செய்தியாளர் , செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!