திருவண்ணாமலை மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரண தந்தை பேடன் பவல்166 வது பிறந்த நாளை முன்னிட்டு மெகா பேரணி..

 

உலக சாரண, சாரணிய இயக்கத்தை தோற்றுவித்த சாரண தந்தை பேடன் பவல் பிறந்த நாள் ஆண்டுதோறும் சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுறுத்தலன்படி திருவண்ணாமலை மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரணதந்தை 166 வது பிறந்த நாளை முன்னிட்டு மெகா பேரணி மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி  நடைபெற்றது .  மாவட்ட பயிற்சி மையத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட கல்வி அலுவலர்  காளிதாஸ் தலைமை தாங்கி பேரணியை கொடி அசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட செயலர் பியூலா கரோலின் அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன்,மாவட்ட தலைவர் தொழிலதிபர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 500க்கும் மேற்பட்ட சாரண சாரணிய மாணவர்கள் பங்கு பெற்ற பிரம்மாண்ட பேரணி மாவட்ட பயிற்சி தொடங்கி மத்திய பேருந்து நிலையம் , வேங்கிகால் வழியாக சென்று ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை பேரணி நிறைவடைந்தது.

பின்னர் மாவட்ட செயலர் பியூலா கரோலின் தலைமையில் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . பயிற்சிகள் பள்ளியில் படை தொடங்குவது குறித்தும் செயல்பாடுகளை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்வின்போது மாவட்ட தலைவர் தொழில் அதிபர் துரை, மாவட்ட ஆணையர் ரேஞ்சர் அருட் சகோதரி ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் நிகழ்ச்சியின் முன்னதாக, அண்மையில் மறைந்த மூத்த பயிற்சி ஆணையர்  சீனிவாச வரதன், முன்னாள் மாவட்ட தலைவர் பவுன் குமார் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட நிர்வாக குழு ஆல்வின், சுதாகர், அருண்குமார், கலைவாணி, ரமா காவியா, ஜானகி, மன்சூர் அலி, அசோகன், ஜெகன் மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!