கலசபாக்கம் கருவூல அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்..

கலசபாக்கம் கருவூல அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூபாய் 81 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சார் நிலை கருவூல அலுவலக கட்டிடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து கலசபாக்கம் நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட 95 கிராமங்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி சார்நிலை கருவூல அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதனால் தனது மலைக்கும் போல் அவருக்கு இனி செல்ல தேவையில்லை. கலசப்பாக்கம் தொகுதிக்கு என்னென்ன அரசு அலுவலகங்கள் தேவையோ அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் புவனேஸ்வரி, மாவட்ட கருவூல அலுவலர் உதவி கருவூல அலுவலர் பாரதி, தாசில்தார் ராஜராஜேஸ்வரி வீடியோ மரியதேவ், ஆனந்த் அன்பழகன், யூனியன் கவுன்சிலர் கலையரசி ,வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பொய்யாமொழி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், பவுனு, வள்ளிக்கண்ணு, அண்ணாமலை மற்றும் பலர் உடன் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!