செங்கம் அருகே ரஜினி மன்றம் சார்பில் இருளர் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள்..
திருவண்ணாமலை மாவட்டம், குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் செங்கம் அடுத்த புளியம்பட்டி இருளர் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் ரஜினி மன்றம் வழங்கியது.
செங்கத்தில் ரஜினி மன்றம் சார்பில் செங்கம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள 75 இருளர் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்களை ரஜினி மன்றம் சார்பில் மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன் ஏற்பாடு செய்து வழங்கினார். தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் முன்னாள் ஒன்றிய செயலாளர் சதாசிவம், தன்சிங், இளைஞரணி மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏழுமலை, ஆடலரசு, சாத்தனூர் மோகன், செங்கம் நிர்வாகிகள் ராஜாமணி, ரஜினிதேவி, முத்து, நடராஜ், கோட்டீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் சண்முகம் பாராட்டு தெரிவித்தார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.