செங்கம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர்; குக்கர் வெடித்து படுகாயம் போலீசார் விசாரணை..
செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே சதாகுப்பம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சியபோது குக்கர் வெடித்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.
ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் தலைதூக்குகிறது. ஆன்லைன் மூலம் யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சி வருகின்றனர்.
தண்டராம்பட்டு அருகே உள்ள சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் 6 பேர் நேற்று இரவு வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சினர். அப்போது திடீரென குக்கர் வெடித்து சிதறியது. இதில் 30 வயது வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராயம் காய்ச்ச பயன்படுத்திய சிலிண்டர், அடுப்பு, குக்கர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் படுகாயம் அடைந்த வாலிபரின் நண்பர்கள் 5 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.