வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும்:- செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு!
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து செங்கம் பகுதிக்கு வருபவர்கள் தாங்களாக தகவல்கள் தெரிவித்து மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமென செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி தெரிவித்துள்ள அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பலர் அரசுக்கு தெரியாமல் வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் சென்னை ஈரோடு மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து வருகை தந்த 130 பேர் செங்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். செங்கத்துக்கு வெளியூர் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தாங்களாக முன்வந்து தங்களை பற்றி தாங்கள் எங்கிருந்து வந்தனர் என்கின்றன அனைத்து விவரங்களையும் கீழ்கண்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் செங்கம் தாசில்தார் தொலைபேசி எண் 7904110232 மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் 9498154885 செங்கம் காவல் ஆய்வாளர் 9098105092 செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் 7824058011 வட்டார மருத்துவ அலுவலர் 8754136188 ஆகியவர்களிடம் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.