தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பல குடும்பங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்!
தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஜமுனாமரத்தூர் காஞ்சி காரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு 80 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார். கரோனா ஊரடங்கு உத்தரவால் சிக்கித் தவிக்கும் ஏழைகள், எளியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு ,கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். மேலும் வென்றெடுப்போம் வா என்று குழுவின் மூலமாக கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் கோரிக்கை தேவைகளை நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு 80 ஆயிரம் குடும்பங்களுக்கு முக கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட நோய்த்தொற்று தடுப்பு உபகரணங்கள் வழங்கும் பணியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தொகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து கலசபாக்கம் காரப்பட்டு காஞ்சி புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.