திருவள்ளூர் அருகே பயங்கர ரயில் விபத்து: நடந்தது என்ன??
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது.
தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன.
பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல்.
ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், மீட்புகுழுவினர் விரைந்துள்ளனர்.
கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் பிரபுசங்கர் தகவல்.
You must be logged in to post a comment.