வாலிபரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள் ‘ரீல்ஸ்’ வீடியோ மூலம் போலீசாரிடம் சிக்கினர்.

வாலிபரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள் ‘ரீல்ஸ்’ வீடியோ மூலம் போலீசாரிடம் சிக்கினர்.

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் மதில் சுவர் வெளிப்புறத்தில் நேற்று கை, கால், தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் கீழே விழுந்து உள்ளதை பார்த்த ரெயில் பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் சேர்ந்த் சுராஜ் (34) என்று தெரியவந்தது. இவர் சென்னையில் கூலிவேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மின்சார ரெயிலில் சுராஜ் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் கஞ்சா போதையில் 17 வயதுள்ள 4 சிறுவர்கள் ரெயிலில் ஏறினர். அதில் ஒரு சிறுவன் ரெயிலில் பயணம் செய்த சுராஜை வெட்டுவதுபோல கத்தியை காட்டி மிரட்டினார். அதை மற்றொரு சிறுவன் செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்தார். தடுக்க முயன்ற சுராஜை 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய சுராஜ், திருத்தணி ரெயில் நிலையத்தில் இறங்கி நடந்துசென்றுகொண்டிருந்தார். அவரை விடாமல் பின்தொடர்ந்த போதை சிறுவர்கள், சுராஜை மிரட்டி மறைவான இடத்துக்கு இழுத்து சென்றனர். அங்கு வைத்து 3 சிறுவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுராஜை சரமாரியாக வெட்டினர். அதை மற்றொரு சிறுவன் செல்போனில் வீடியோ எடுத்தார். தன்னை விட்டு விடும்படி சுராஜ் ரத்தம் சொட்ட சொட்ட மன்றாடினார். போதையில் இருந்த சிறுவர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுராஜை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி போலீசார் சுராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா போதையில் சிறுவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்த சுராஜூடம் தகராறு செய்த ‘ரீல்ஸ்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

திருவாலங்காடு அருகே அரிச்சந்திராபுரம் சேர்ந்த நந்தகோபால் (17), அரக்கோணம் சேர்ந்த சந்தோஷ் (17), விக்கி(17),திருத்தணி அருகே நெமிலி சேர்ந்த சந்தோஷ் (17) ஆகிய 4 பேர் கஞ்சா போதையில் வட மாநில வாலிபர் கழுத்தில் கத்தியை வைத்து ரிலீஸ் வெளியிட்டதும் தடுத்த அவரை கொலை வெறி தாக்குதல் நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது தொடர்ந்து 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!