தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து நடக்கும் கூட்டுப் போராட்டத்தை வெற்றி அடையச் செய்வீர்:-திருப்பூர் சு.துரைசாமி வேண்டுகோள்!
மத்திய அரசு அண்மையில் தொழிலாளர்களுக்கு விரோதமாக, தொழிலாளர் வர்க்கம் நூறாண்டு காலத்திற்கு மேலாகப் போராடிப் பெற்ற, 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி, நாளொன்றுக்குப் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று, தொழிலாளர்களுக்கு விரோதமாக அறிவிப்பு வெளியிட்டது.
மத்திய அரசாங்கத்தின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் இருக்கின்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி 18.05.2020 ஆம் தேதி அன்று சென்னை எச்.எம்.எஸ் தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நமது தொழிலாளர் முன்னணியின் தலைவர் வழக்கறிஞர் அந்திரிதாஸ் அவர்களும், செயலாளர் வெங்கடேசன் அவர்களும் அனைத்துச் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 22.05.2020 காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற தொழிற்சாலை அலுவலகத்திற்கு முன்பாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே, எம்.எல்.எப். தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டு நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
திருப்பூர் சு.துரைசாமி பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி ‘தாயகம்’ சென்னை -8 20.05.2020

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









