ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், கழிவு வைக்கோல் மற்றும் இதர பால் கழிவுகளைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல் பற்றியும் , பசுவின் சாணமும் சிறுநீரும் தாவரங்களுக்கு சீரான ஊட்டச்சத்து கிடைக்கும் என்றும் சாகுபடிக்கு முன்னதாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ மக்கிய தொழு உரத்துடன் சூப்பர் பாஸ்பேட் உரத்தை கலந்து அடியுரமாக இடுவதால் மணிச்சத்தின் பயன்பாடு அதிகரித்து மண் வளமும் மேம்படும் என வேளாண்மை உதவி இயக்குநர் தர கட்டுப்பாடு நாகராஜ விவசாயிகளுக்கு தெரிவித்தார்.து ணை வேளாண்மை அலுவலர் ச. செய்யது முஸ்தபா. உதவி வேளாண்மை அலுவலர் பழனி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோசப் ஏற்பாடுகளை செய்தனர்.

You must be logged in to post a comment.