144 தடை உத்தரவு எதற்கு பிறப்பிக்கப்பட்டது, எப்போது பிறப்பிக்கப்பட்டது? – நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி..
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? – நீதிபதிகள் கேள்வி.
தீபத்தூண் பழமையானது ஆனால் கோவிலை விட பழமையானதா என தெரியவில்லை – தமிழ்நாடு அரசு
ஒரு வழக்கிற்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கப்பட வேண்டும், ஆனால் தனி நீதிபதி அவசரம் காட்டுகிறார் – தமிழ்நாடு அரசு.
நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து இன்றே விசாரிக்க உள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் – தமிழ்நாடு அரசு.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு செயல்முறையை நீதிபதி அவசரப்படுத்துவது ஏன்? – தமிழ்நாடு அரசு.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றப்படுவதில்லை – தமிழ்நாடு அரசு.
1862ம் ஆண்டிற்கு பிறகு வழக்கத்தில் இல்லாத ஒரு செயலை தற்போது உடனடியாக ஏன் மேற்கொள்ள வேண்டும்? – தமிழ்நாடு அரசு.
மலை மீது ஒரு இடத்தில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும், 2 இடங்களில் தீபம் ஏற்றுவது நம்பிக்கையை புண்படுத்தும் – தமிழ்நாடு அரசு.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய காலதாமதம் செய்தது ஏன்? – நீதிபதிகள்
மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் வரை கால அவகாசம் உள்ளது – தமிழ்நாடு அரசு.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றச் சென்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுத்ததா? – நீதிபதிகள் கேள்வி.
காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க மறுத்ததால் தான் நீதிபதி, CISF பாதுகாப்புடன் செல்ல உத்தரவிட்டார் – மனுதாரர்.
தனி நீதிபதி உத்ததரவு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மனுதாரர்.


You must be logged in to post a comment.