சிக்கந்தர் பாதுஷா அவர்கள் மிகச் சிறந்த ஆன்மீகவாதியாகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் என்னேரமும் இறை தியானத்தில் இருப்பவராகவும் 5 நேர தொழுகையாளியாகவும் இருந்தார்கள். இவர்கள் சவூதி ஜித்தா என்ற துறைமுக நகரின் ஆளுநராகயிருந்தார்கள் ஏர்வாடி இப்ராகிம் பாதுஷா அவர்களின் கனவில் தோன்றிய நபிகள்நாயகம் தமிழகம் சென்று இஸ்லாம் பரப்ப வேண்டியதன் பேரில், இப்ராகிம் பாதுஷா தலைமையில் 4000 பேர்களில் ஒருவராக சிக்கந்தர் பாதுஷாவும் தமிழகம் வருகிறார்கள். கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள் நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி ஒரே இறைவன் கொள்கைகளை விளக்கி மத பரப்புரை செய்து வந்தார்கள். அப்போது பாண்டிய நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம் (வலி) அவர்கள் மற்றும் 4000 பேர்களும் வாளேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இப்ராகிம் பாதுஷாவின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறார். குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவர் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறார் நியாயத்துக்காக போராடிய ஏர்வாடி பாதுஷாவே நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானார். இப்ராகிம் பாதுஷாவும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த 4000 பேரோடு குலசேகர பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள் அப்போரில் விக்கிரபாண்டியன் தோற்கடிக்கப்பட்டார். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தார். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் படையின் கீழ் வந்தது இப்ராஹிம் படை மீட்ட பகுதிகளை குலசேகர பாண்டியரிடம் ஒப்படைக்கிறார்கள் மதுரை பகுதியையும் , முகவை பகுதியையும் குலசேகர பாண்டியன் இப்ராகிம் பாதுஷாவிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவர் விருப்பபடி குலசேகர பாண்டியனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் நெல்லை, மதுரை பகுதிகளை ஆட்சி செலுத்தினார்கள் மதுரை பகுதியை சிக்கந்தர் பாதுஷா கவர்னராக இருந்து ஆட்சி புரிய நியமித்தார்கள் இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார்கள். அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார்கள். இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே! போரில் தோற்ற மன்னன் விக்கிர பாண்டியன் ஓடோடி திருப்பதி சென்று தன் நண்பர்கள் அனைவரையும் சந்தித்து அரேபியர்களின் படையெடுப்பு பற்றி விவரித்தார். அங்கேயே விருந்தினராக இருந்து போர் பயிற்சி கற்று வந்தார் விக்கிரபான்டியன் அவர்களுக்கு விக்கிரபாண்டியன் நன்பர்கள் குழு ஒரு பெரிய போர் படையை உருவாக்க உதவினார்கள். 12 ஆண்டுகள் பிறகு ஏர்வாடி பாதுஷா நாயக படையில் 4000 பேரில் அப்பாஸ் தலைமையிலான 3000 பேர் கொண்ட குழு மெக்காவிற்கு உம்ரா செய்ய சென்றார்கள். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திய விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் மற்றும் திருபான்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் மதுரையை நோக்கி படையெடுத்து வந்தார்கள். போர் நடத்த பெரும்படையோடு நெருங்கினார் திருபாண்டியன்; திருப்பாண்டியன் மதுரை வருகையை பற்றி அறியாத மதுரை கவர்னர் சிக்கந்தர் அவர்கள் தன் போர் படை பற்றி கவனம் செலுத்தாமல் இஸ்லாத்தை பரப்புவதில் கவனம் செலுத்தினார்.
திருப்பாண்டியனின் வலிமைமிக்கப் படை சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவுடன் தீவிரமாகப் போரிட்டது. இரு தரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பல பகுதி சுல்தான்கள் இந்தப் போர்களில் கொல்லப்பட்டனர் படுகொலை செய்யப்பட்டனர் பாண்டியர்களை எதிர்கொள்ள அரேபியர்களுக்கு அதிக படைகள் தேவைப்பட்டன. சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தனது ஒன்பது வீரர்களை அனுப்பி, போரைப் பற்றியும் மேலும் படைகள் தேவை என்றும் பௌத்திரமாணிக்கப்பட்டினத்தின் (தற்போது ஏர்வாடி) ஆட்சியாளரான சுல்தான் சையது இப்ராகிம் ஷகீத்துக்கு தெரியப்படுத்த அனுப்பினார்கள் இதனால் ஏர்வாடியிலிருந்து அதிகமான வீரர்கள் வருவார்களே என்று அஞ்சிய திருப்பாண்டியன், 9 அரேபிய வீரர்களைத் தடுத்து நிறுத்த தன் படைவீரர்களை ஏராளமாக அனுப்பினார். கீழடி சிலைமான் அருகே உள்ள பள்ளிசந்தையில் சையத் சாலார் ஷா ஷஹீத் என்பவரும், சக்கிமங்கலம் அருகே உள்ள கர்சேரியில் சையது இப்ராகிம் ஷஹீத் கொல்லப்பட்டனர். எஞ்சிய ஏழு வீரர்களும் போரிட்டு ஏர்வாடி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர். மீண்டும் ஒரு பெரிய பாண்டியப் படைவீரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர் மற்றும் மானாமதுரையில் நடந்த கடுமையான போரில்(அஞ்சனமார் – பாஞ்ச் பீர்) என அழைக்கப்படும் ஐந்து அரேபிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதமுள்ள இரண்டு வீரர்கள் செய்தியை தெரிவிக்க கடினமாக பயணம் செய்தனர். உமர் கத்தாப் ஷஹீத் கொல்லப்பட்டார். உயிருடன் இருந்த ஒரே வீரர் பாண்டியர்களால் பலத்த காயமடைந்தார். அவர் ஏர்வாடியை அடைந்து மதுரைக்குத் திரும்பிய திருபாண்டியனின் படையெடுப்புச் செய்தியைத் தெரிவித்தார். இதனால் வருத்தமடைந்த மாமன்னர் சுல்தான் சையது இப்ராகிம் பாதுஷா நாயகம் அவர்கள் மதுரையை நோக்கி பெரும் படையை அனுப்பினார் ஆனால் பாதுஷாவின் படைகள் மதுரையை அடைவதற்குள் வீரப்பாண்டியன் ஏர்வாடி வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை சஹீதாக்கி வெற்றி கொண்டார். ஏர்வாடியில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். பிறகு மதுரையில் சிக்கந்தரை தேடி அலைந்த திருப்பான்டியன் இறுதியாக திருப்பரகுன்றம் அருகே மலை மேலே சிக்கந்தர் பாதுஷா இருப்பதை அறிந்தார்.
சிக்கந்தரை சுற்றி வளைத்தார்கள் பான்டிய படைகள். மரணம் நெருங்குவதை அறிந்த சிக்கந்தர் சுல்தான் பாதுஷா தனக்கு விருப்பமான திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார்.
பாண்டிய படைகள் திருப்பரங்குன்ற மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பாலமஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள் பின்னர் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவர்கள் மலை குகையில் தொழுகையில் நின்று வணங்கியபோது பாண்டிய வீரர்களின் மாலூன்களில் ஒருவர் சுல்தான் சிகந்தர் பாதுஷா வை கொன்றார். சிக்கந்தர் பாதுஷா ஷஹீதாக்கப்பட்ட நாள் (ஹிஜ்ரி 607) ரஜப் பிறை 17.
சிக்கந்தரின் மரணத்துக்கு பின் பாண்டிய மன்னருக்கு கண்பார்வை பறிபோனதால், சிக்கந்தர் அவர்களின் அடக்கத்தலத்தில் மன்னிப்பு பெற்று மீண்டும் கண்பார்வை பெற்றார்.
அதற்க்கு நன்றியாக சிக்கந்தர் இறந்த இடத்தையும் மலை உச்சியை சுத்தியுள்ள நெல்லிதோப்பு பகுதி மலை நிலங்களையும் தானமாக கொடுத்து அதற்க்கு செம்பு பட்டயமும் கல்வெட்டும் இட்டு கொடுத்தார்கள்.
அவர் இறந்த அந்த மலை உச்சி இடத்திலேயே பாண்டியர்களின் ஒத்துழைப்போடு கல்லறை கட்டபடுகிறது.
மலை மேல் அமைந்துள்ள அவர்களது புனித தர்காஹ், தங்கும் மண்டபம், மலை பாதை படிக்கட்டுகள், தொழுகைப் பள்ளி ஆகியவற்றை கி.பி. 1805 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் அஜீமுத்_தவுலா அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது, பெரிய அளவில் தர்காவை சீர்செய்தது இந்துவாய் இருந்து முஸ்லீமாக மாரிய மருதநாயகம் கான் சாகிபு ஆட்சியில் தான்.இதுவே உண்மையான வரலாறு ஆகும்.

