128 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் மான்புறு மங்கை விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆசிரியர் பயிற்சி முதல்வர் முனைவர் ஜெயமேரி தலைமை தாங்கினார். முனைவர்.ஃபிரியா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் வழ. ஆரோக்கிய மேரி.எம்.எல். கலந்து கொண்டு சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றி சிறப்புரையாற்றினார்.
விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக சமூகத்தில் பணியாற்றிய நெல்லை இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் வழ.ஆரோக்கியமேரி, நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, செல்வி. ரர்ஜர் பீவி ஆகியோர்க்கு மான்புறு மங்கை விருதை முனைவர் ஜெயமேரி. நறுமுகை நற்றமிழ்ச் சங்கம் கௌரவத் தலைவர் லயன் தம்பான் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து பெண்களின் முன்னேன்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது தன்னம்பிக்கையே. சுற்றமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் மாணவிகள், பேராசிரியர்கள்,அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் முனைவர் அனுசுயா நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









