கொலை குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதிமுக நகர செயலாளரை கைது செய்யக்கோரி, இரு வெவ்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல்..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற வாலிபர் கொலை வழக்கில் கொலை குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதிமுக நகர செயலாளர் விஜயனை கைது செய்யக்கோரி, இரு வெவ்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல்.

 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே புங்கங்குளம் கிராமத்தில் கடந்த 7ஆம் தேதி மணிகண்டன் என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை  செய்யப்பட்டார்.

இக்கொலை சம்பவம் சக்திவேல் மற்றும் அட்டாக் பிரகாஷ் மற்றும் திருமங்கலம் அதிமுக நகர செயலாளர் விஜயன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதிமுக நகரச் செயலாளர் விஜயன் மட்டும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில்,

அவரை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தனது பாதுகாப்பில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், மேலும் அப்பகுதி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் தேவர் திடல் முன்பு அதிமுக நகரச் செயலாளர் விஜயனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆளுங்கட்சிக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். இதற்கு அதிமுக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனது கட்சியினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கிராம மக்கள் கண்டித்தனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!