முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சொக்கலிங்கம் தனது ஆசிரியர் பணியை நிறைவு செய்து50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நெல்லை சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள பாராட்டு விழா, மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம்
தூத்துக்குடிக்கு வருகை தந்த திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் பேசுகையில்:-“டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்ததை பார்க்கும் பொழுது அந்த திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவது என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது,இதனால் வட மாநிலத்திலிருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்த மக்களின் சதவிகிதத்தை பொருத்து உணவு பொருட்களை வழங்க வேண்டும் ,இது மத்திய, மாநில அரசுகளுக்கு இத்திட்டம் சிக்கலாக மாறும் தமிழக அரசு எடுத்துள்ள இந்த நிலைபாடு சுதந்திரமாக எடுக்கப்பட்ட நிலைப்பாடாக தெரியவில்லை
தமிழகத்தில் தொழில் துறையில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாக முதல்வர் கூறியிருக்கிறார்.அவர் வந்த பிறகு அது குறித்து கருத்து
தெரிவிக்கப்படும் என்றார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார் என ஹெச்.ராஜா கூறியிருப்பது மோடி அரசு பலரை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருவதை காட்டுகிறது அதனடிப்படையிலேயே ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்.நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் யாரென்று அறிவிக்கட்டும் அதன் பின்பு அது குறித்து பேசுவதாக குறிப்பிட்டார்.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது வன்மையாகக் கண்டனத்துக்குரியது காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்,சுங்கசாவடி தொடங்கப்பட்டது குறிதான அறிவிப்பு பலகைகளை சுங்கசாவடி முன்பு வைக்கவேண்டும் , திடீரென கட்டண உயர்வு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.திடீரென அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதுமையாக இருக்கிறது, ஜெயலிதா அவர்கள் முதல்வராக இருக்கும்போது அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்யவில்லை. அரசு முடியப் போகின்ற தருணத்தில் அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் அரசு செலவில் சுற்றுலா பயணமாக செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் சுற்றுப் பயணம் செல்வது தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருந்தால் அது வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்தார்..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









