திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

கூடல் இன்பங்கள்..!

அத்தியாயம் 39

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! “அவனைச் சந்திக்கவுள்ளீர்கள்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!(அல்குர்ஆன் 2:223)

மனைவியரை விளைநிலங்களுக்கு
திருக்குர்ஆன் ஒப்பிடுகிறது.

ஒருவன் தனக்கு சொந்தமான நிலத்தில் எப்படி உழுது, விதைவிதைத்து, நீர்பாய்ச்சி, நல்ல விளைச்சலை பெறுகிறானோ, அதுபோல அவனது மனைவியும் அவனுக்கான வாரிசை தனது கருவறையில் சுமந்து பெற்றுக்
கொடுக்கிறாள். கணவன் மனைவியின் பிணைப்பு (Bonding) எப்படி பிரியமாக இருக்கவேண்டும் என்றும் இல்லறத்தின் நல்ல சூத்திரங்களையும், அழகான முறையில் திருக்குர்ஆன் கற்றுத்தருகிறது.பெருமானாரின்
(ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்)
அவர்களின் காலத்தில் யூதர்கள்
சில முறைகளில் தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது என்று கருதி வந்தனர். அப்படி உறவு கொண்டால், பிறக்கும் குழந்தை மாறுகண் உடையதாகப் பிறக்கும் எனவும் பிரச்சாரம் செய்தனர். இந்த தவறான நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில், இந்தவசனம் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட நாட்களில், நேரங்களில்தான் உறவுகூட வேண்டும் என்ற மூடநம்பிக்கையையும்,
இந்த வசனம் நிராகரிப்பதாகக் கூறப்படுகிறது. குழந்தை பெறமுடியாத தம்பதிகள் இன்று செயற்கை கருத்தரித்தலை நாடுகிறார்கள். செயற்கை கருத்தரித்தல் இன்றைக்கு மிக சாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது. பல்வேறு உடலியல், சூழலியல் காரணங்களால், இன்று கருத்தரித்தல் சவாலாக மாறிவிட்ட நிலையில், ஏராளமான செயற்கை கருத்தரித்தல் மையங்கள் (fertility centre) உருவாகிவிட்டது. செயற்கை முறையில் கருவூட்டப் பல வழிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கணவன் மனைவி இருவரின் உயிர்த்துளிகள் (விந்தணு+ சினைமுட்டை) ஆய்வகங்களில் ஒன்றிணைக்கப்பட்டு கரு முட்டைகள் வளர்க்கப்பட்டு பிறகு மனைவியின் கருப்பையில் மாற்றம் செய்யப்பட்டு அது வளர்ச்சி அடைந்து குழந்தையாக பிறக்கிறது. கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்கு செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. கணவனுக்கு குறை இருக்கும்போது மற்றவரின்
உயிரணுவை பெண்ணின் சினைமுட்டையோடு இணைத்து கருவுறுதல் நிகழ்த்தும் நிலைகளும் தொடர்கிறது.

இஸ்லாமிய பார்வையில், பிறரின்
உயிரணுவை எடுத்து பெண்ணிற்குள் விதைப்பது முற்றிலும் விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்றைய மேற்கத்திய கலாச்சாரங்கள் இவைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இன்று வாடகைத் தாய்கள்,
விந்தணு,கருமுட்டை ஆய்வகங்கள் என குழந்தை பிறப்பு கார்ப்பரேட் மயமாகி விட்ட சூழலில்,

மருத்துவத்தின் நவீன வழிமுறைகளில்,
பல வகைகளில் கருத்தரிப்பு செய்யப்பட்டு
குழந்தை பிறப்புகள் நடைபெறுகிறது.

இஸ்லாமிய தம்பதியர் களுக்கான வழிகாட்டல்களை இதற்கான ஷரியத் சட்டங்களை உலமாக்களே அறிவார்கள்.

அதிகமாக உடலுறவு கொள்ளும் தம்பதியர்கள் இடையே மன அழுத்தம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.நாள்தோறும் தாம்பத்ய உறவுகொள்ளும் தம்பதிகளிடையே மனக்கசப்பு,சண்டைகள், குறைந்து நெருக்கம் அதிகரித்து இருக்கிறது.

நிறைவான உடலுறவு கொள்ளும் தம்பதிகளின் ஆயுட்காலம் சுமார் எட்டு ஆண்டுகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்று ஒருமித்து சங்கமித்து வாழும் தம்பதிகளிடையே
விவாகரத்து என்ற கருத்து முரண்பாடுகள் ஏற்படாது.

சிறந்த தாம்பத்ய உறவால் இதயப்
பிரச்சினைகள் குறைகின்றன. ரத்த அழுத்தம் சீராகிறது. ஆகவே, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. சுரக்கும் ஹார்மோன்களால், ரத்த ஓட்டம் அதிகரித்து செல்கள்
புத்துணர்வு அடையச் செய்வதால் இளமை நீடித்திருக்கிறது.

சுமார்20 நிமிடங்கள் வரை உறவு கொள்ளும்போது, உடலில் 300 கலோரிகள் சக்தி எரிக்கப்படுவது உடலுக்கு நன்மை தருகிறது.

பாலுறவில் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. உடலுறவு கொள்ளும்போது சுரக்கும் ஆக்ஸிடோசின் (oxytocin),உடலை தளர்வாக்கி ஆரோக்கியமான தூக்கத்தை தருகிறது. இயற்கையாக தூங்கும் தூக்கத்தை விட,உடலுறவுக்கு பின் தூங்கும் தூக்கம் ஆரோக்கியமானது.உடலுறவில் ஈடுபடும்
தம்பதியருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.IGA என்ற Immunoglobulin
அதிகமாக சுரப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலுறவின்போது Neurotransmitter எனப்படும் நரம்பியகடத்திகள் வெளியாவதால், தசைகள் தளர்வாகி உடல்வலிகள் குறைகின்றன. நல்ல உடலுறவில் ஈடுபடும் ஆண்களுக்கு
Prostate cancer வரும் வாய்ப்புகள் 30%வரை குறைவதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற ஏராளமான நன்மைகளை தரும் தாம்பத்ய வாழ்க்கையில்,
மனைவியை விளைநிலங்களுக்கு
ஒப்பிட்டு சரியாக, முறையாக பயன்படுத்திக்கொள்ள அறிவறுத்துவதையும், கணவனும்,மனைவியும் ஒருவொருக்கொருவர் ஆடை என்று கூறும் திருக்குர்ஆன் வசனமும் இல்லறத்தின் நன்மைகளை, இனிமைகளை, ஆரோக்கியங்களை,
கூறுவது எவ்வளவு ஆச்சரியமானது என்பதை அறியலாம். இவைகளை முறையாக அறிந்து கொள்ளும் தம்பதியர்களிடையே முரண்பாடுகள் தோன்றாது. விவாகரத்துகள் குறையும்.

திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..!
நாளை கருவறை ஆச்சரியங்களை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!