திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

அத்தியாயம் (2)

.சாக்கடல் சாசனச்சுருள்கள்…!

கப்ளிசேட்!

அந்தக்குகைக்கும் அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்” என்று நீர் நினைக்கிறீரா? (அல்குர்ஆன் 18:9)

1947 ஆம் ஆண்டு ஒரு ஆடு மேய்க்கும் அரபுச் சிறுவன் தனது காணாமல் போன ஆட்டுக்குட்டியை தனது ஊரின் அருகில் சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதியில் தேடி அலைந்தான்.

அந்த மலைப்பகுதி “கும்ரான் மலைப்பகுதி” என்று அழைக்கப்படுகிறது. ஆட்டுக்குட்டியை தேடிய சிறுவன், அங்குள்ள குகைக்குள் பார்த்தபோது, மண்பாண்டங்களில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தோல் சுருள்களை ஆச்சரியமாக பார்த்தான். அதிலிருந்து சிலவற்றை‌ எடுத்து வந்து செருப்பு தைக்கும்  தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும்,மகனும் குகைக்குள் இருந்த அனைத்து சுருள்களையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அந்தப்பழைய தோல்சுருள்களை தனது செருப்பு தைக்கும் தொழிலுக்கு பயன் படுத்த நினைத்து அதை உற்றுப்பார்த்தபோது, அதில் ஹிப்ருமொழியில் ஏதோ எழுதியிருந்ததைப் பார்த்து அர்த்தம் தெரியாமல் அன்றைக்கு ஜோர்டான் மன்னரின் ஆட்சியிலிருந்த கிழக்கு‌ ஜெருசலத்தின் ஒரு பழைய புத்தகக் கடைக்காரிடம் காண்பித்திருக்கிறார். ஓரளவு‌ ஹிப்ரு மொழியறிந்த புத்தகக்கடைக்காரர்,அந்தச் தோல்சுருள் பழங்கால முக்கிய செய்திகளை கொண்டதாக இருக்கவேண்டும் என்று கருதி, செருப்புக் கடைக்காரரிடம் இருந்த அனைத்து சுருள்களையும் விலை கொடுத்து வாங்கிவிட்டார். கிறிஸ்தவரான அந்தபழைய புத்தகக்கடைக்காரர், அத்தனை தோல் சுருள்களையும் அந்த நகரிலிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில்‌ ஒப்படைத்து விட்டார். இந்த சமயத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட செய்தி பரவத் தொடங்கியது.அதிலுள்ள செய்திகளை அறிந்து கொள்வதற்கு முஸ்லீம்களும்,யூதர்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.  அப்போது ஜோர்டானை ஆண்டமன்னர் ஹுசைன் அவர்கள்,அந்த தோல்சுருள்களை முஸ்லீம்கள், யூதர்கள்,கிறிஸ்தவர்கள், அடங்கிய பொதுவான குழுவிடம் ஒப்படைத்து அவைஆராயப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் கிறிஸ்தவ பாதிரியார்கள் “அது தனியார்சொத்து”என பொது ஆய்விற்கு உட்படுத்த மறுத்துவிட்டனர். கிறிஸ்தவர்களில் பல அறிஞர்களுக்கு கூட இதனை படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அந்த தோல்‌சுருள்களில மறைந்திருந்த மர்மங்கள் என்ன? அதற்கும் மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆனின் ஆயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

தொடர்ந்து ஆராய்வோம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!