திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
மரபணு அதிசயங்கள்..!
அத்தியாயம் 8
“மர்யமின் மகனையும், அவரது தாயாரையும் சான்றாக ஆக்கினோம். செழிப்பும், நிலையான தன்மையும் கொண்ட உயரமான இடத்தில் அவ்விருவரையும் தங்க வைத்தோம்.”
(அல்குர்ஆன் 23:50)
ஆணின் உயிரணுவும்,பெண்ணுடைய சினைமுட்டையும் இணைந்து, கரு உருவாகி வளரும் போது,அதில் அதற்கான மரபணுக்கள் தோன்றுகின்றன. இரண்டும் கலந்த கலவையாக புதிய மரபணு அங்கு உருவாவதால், அது பெற்றோரை எல்லா வகையிலும் ஒத்ததாக இருப்பதில்லை. ஆனால் , உயிரினங்களின் உடல் முழுவதுமுள்ள எல்லா தசைகளிலும் மரபணுக்கள் வியாபித்துள்ளன. சிறிய அளவு தசையை எடுத்து அதிலிருந்து மரபணுவை மட்டும் பிரிக்கின்றனர். இந்த மரபணு 25 வயதுடைய ஒருவனின் மரபணு என்றால் அந்த மரபணுவின் வயதும் 25 தான். இதன் காரணமாக யாருடைய மரபணுவிலிருந்து குழந்தை உருவாக்கப் படுகிறதோ அவரைப்போலவே அச்சு அசலாக குழந்தை இருக்கும். ஆணின் உயிரணுவையும், பெண்ணின்
கருமுட்டையையும் சோதனைக்குழாயில் வைத்து வளர்க்கிறார்கள். இரண்டும் கலந்து அதில் புதிய மரபணுக்கள் உருவாகி இருக்கும். குறிப்பிட்ட காலம் வரை குழாயில் (Test tube) வளர்த்து அதில் உருவான மரபணுவை நீக்கிவிட்டு, யாரை குளோனிங் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்களோ
அவருடைய மரபணுவை அந்த இடத்தில் வைக்கிறார்கள். இதன்பிறகு சோதனைக்குழாயில்
வளர்த்ததை, பெண்ணின் கருவறையில் வைக்க கருவளர்ச்சி ஏற்படுகின்றது. சாதாரண குழந்தை பிறப்பதைப்போல
இந்த மரபணுக் குழந்தையும் பெறப்படுகிறது. மனிதனில் இது சோதித்து பார்க்கப்படாவிட்டாலும், மருத்துவ விஞ்ஞானிகள் ஆடு, எருமை,பன்றி ஆகிய உயிரினங்களில் சோதித்து வெற்றி கண்டு இருக்கிறார்கள். மனிதனைப் பொறுத்தவரை ஒருவனை குளோனிங் செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். 25 வயதுடைய ஒருவனுடைய மரபணுவை எடுத்து குளோனிங் செய்து உருவாக்கினால், அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவின் வயது 25 என்பதால் அந்த குழந்தையின் சிந்தனையும், அறிவும்,25 வயது மனிதருக்குரியதாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். இதில் ஈசா நபி அவர்களின் பிறப்பை ஆராய்ந்தால் பல ஆச்சரியங்கள் நமக்கு விளங்கும். தந்தையில்லாமல் ஒரு குழந்தையை உருவாக்க இறைவன் நாடினால் “ஆகுக”என்று ஒரு சொல்லின் மூலமே உருவாக்கிவிட முடியும். மனிதனுக்கு புரியவைக்கவே இறைவன் ஒரு வானவரை அனுப்பி மர்யம் (அலை) அவர்களிடம், (ஒரு மரபணுவை) ஊதவைத்து பிறகு குழந்தை உருவாகி குழந்தை பெற ஒரு தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்வின் மூலம் இறைவன் மனிதகுலத்திற்கு
உணர்த்துகிறான் என்று புரியமுடிகிறது. மேலும், பிறந்தவுடன் தொட்டிலில் அவர்கள் பேசியதும் ,அவர் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதாலும், அந்தக் குழந்தை இறைச்செய்தியை புரிந்து கொள்ளவும், பேசும் சக்தி பெற்றதும், வியப்பான ஒன்றில்லை என்பதை நாம் புரிவதுடன், இன்றைய குளோனிங் தொழில்நுட்ப கருத்துடன் பொருந்திக் கொள்வதையும் புரிந்து கொள்ளலாம். குளோனிங் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும்,அதன் நன்மைகளும், தீமைகளும், பயன்களும் இனி வருங்காலங்களில் தெளிவாக அறியும் சூழல் ஏற்படலாம். மேலேயுள்ள திருக்குர்ஆன் வசனம் செழிப்பாக, உயரமான இடத்தில் வைத்திருந்ததாக அறிவிப்பதின் மூலம் இந்த தொழில்நுட்பம் சிறப்பாக வளரும் என்ற கருத்தும் இதில் உள்ளீடாக இருப்பதை புரியமுடிகிறது.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
நாளை ஒரு புதிய
செய்தியை ஆராய்வோம்.!
“கப்ளிசேட்”


You must be logged in to post a comment.