திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..!
குளோனிங் சாத்தியமே..!
அத்தியாயம் 7
“தனது கற்பை காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம். அவரையும்,அவரது புதல்வரையும், அகிலத்தாருக்கு சான்றாக்கினோம்”(அல்குர்ஆன் 21:91)
ஈசா நபியவர்கள் ஆணின் உயிர் அணுவின்றி கன்னித் தாய் மர்யம் (அலை) மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருக்குர்ஆன் இதனை வெறும் வரலாறு எனக்கூறாமல், இதனை பெரும் அத்தாட்சி எனக்கூறுவதின் மூலம் மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது. மனிதர்கள் முயற்சித்தால் குளோனிங் சாத்தியமாகும் என்பதை இந்த நிகழ்ச்சி புரிய வைக்கிறது. இல்லை எனில் திருக்குர்ஆன் கூறும் அத்தாட்சி என்பதற்கு பொருள் இல்லாமல் போய்விடும். சாத்தியமானதையே திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைய நவீன உலகில் உயிர்களை, உயிரணுக்களுக்கு மாற்றாக மரபணுக்களை பயன்படுத்தி உருவாக்கலாம் என்று கண்டுபிடித்து
உள்ளனர். ஒரு ஆடு குட்டி போட்டால் அந்தக்குட்டி எல்லாவகையிலும் தாயைப்போலவோ, அல்லது அது உருவாக காரணமான கிடாயைப்போலவோ இருப்பதில்லை. சில விஷயங்களில் தாயை ஒத்ததாகவும், சில விஷயங்களில் தந்தையை ஒத்ததாகவும் இருக்கும். சில சமயங்களில் பெற்றோருக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத தோற்றத்திலும் இருக்கும். ஆனால்,ஒரு ஆட்டின் மரபணு மூலம் உருவாக்கப்படுகிற குட்டியானது, அந்த மரபணுக்கு சொந்தமான ஆடு அல்லது கிடாவை எல்லாவகையிலும் ஒத்ததாக இருக்கும். இவ்வாறு மரபணு மூலம் உற்பத்தி செய்யப்படுவதை குளோனிங் என்று சொல்லப்படுகிறது. மரபணு மூலம் உருவாக்கப்படும் குட்டி அப்படியே அதன் தாய் தந்தை போல அச்சுஅசலாக பிறப்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இன்று மரபணு மாற்றங்கள் செய்து
விதைகளும், செடிகளும், விவசாயத்தில் பயன்படுத்தப் படுகிறது. இஸ்ரேல் போன்ற நிலப்பரப்பு குறைவாக உள்ள நாடுகள், பாலைவன நிலப்பரப்புகளை
கொண்ட வறட்சி நிலவும் பகுதிகளில்
மரபணு கலப்பு விதைகளும்,
பயிர்களும் நல்ல விளைச்சலை தருகிறது.விவசாயத்தில் மரபணு மாற்றங்களை பிறகு பேசுவோம்.
திருக்குர்ஆனின் ஒளியில்
குளோனிங் அதிசயத்தை ஆராய்வோம்…!
“கப்ளிசேட்”


You must be logged in to post a comment.