திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!
குளோனிங் அற்புதம்..!
அத்தியாயம் 6
“எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும்,இருக்க எனக்கு எப்படி புதல்வன் உருவாக முடியும்?”என்று(மர்யம்) கேட்டார். (அல்குர்ஆன் 19:20)
குளோனிங் இந்த நூற்றாண்டின் அற்புதமாக பேசப்படுகிறது. ஆண்,பெண் இணைப்பு இல்லாமல் , ஆண்,பெண் செக்ஸ் செல்களுக்குப் பதிலாக உடல் செல்லை (Stem cells) வைத்தே உயிர்களை உருவாக்குவதே குளோனிங் முறையாகும். இந்த முறையில் ஆட்டுக்குட்டி முதல் கன்றுகுட்டி வரை உயிர்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆனால், மனிதன் முதல் முறையாக குளோனிங் மூலமாக உருவாக்கபட்டு இருப்பது மருத்துவ அறிவியலின் உச்சமாகும். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரிலுள்ள குளோன் எய்ட்ஆராய்ச்சி மையத்தில் இந்த குளோனிங் குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலம் தாயிடமிருந்து குழந்தை பிரித்தெடுக்கப் பட்டது. மிக ரகசியமாக குளோனிங் ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிரான்ஸ் நாட்டு பெண் விஞ்ஞானி பாஸ் செல்லியா தலைமையிலான குழுவினர் இந்த குளோனிங் குழந்தையை உருவாக்கியுள்ளனர். உலக அளவில் குளோனிங்மூலம் உயிர்களை உருவாக்குவது சரியா,தவறா என்று பெரும் சர்ச்சை நடைபெற்று வருகிறது. ஆண்,பெண் இணைப்பின் மூலம் உருவாகும் உயிரை செல்களின் மூலம் உருவாக்குவது மருத்துவ மற்றும் உலகியல் நியதிகளுக்கு எதிரானது என்ற கருத்தும் நிலவுகிறது. இக்குழந்தை பிறப்பில் ஆணின் விந்தணு பயன்படுத்தப் படாமல், தாயின் செல்லில் DNA மாறுதல்களை (DNA Reprogramming) செய்து அதை கருவாக மாற்றி கருப்பையில் வளரவைத்து குழந்தை பெறச் செய்தனர். இக்குழந்தை தாயின் அனைத்து குணங்களையும் பெற்று இருக்கும். இந்த ஆராய்ச்சி மையத்தை நடத்தும் “ரேலியன்ஸ்” என்ற ஒருவகை பிரிவினர், 25,000ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு விண் ஓடத்தில் வந்திறங்கிய வேற்று கிரகவாசிகளே குளோனிங் மூலம் பூமியில் மனிதனை உருவாக்கிவிட்டு சென்றதாக நம்புகின்றனர். இந்த ரேலியன்ஸ் மதப்பிரிவிற்கும் உலகம் முழுவதும் 55,000 பேர் பின்பற்றுபவர்கள் (Followers) இருப்பதாகவும் அறியப்படுகின்றது. இந்த அமைப்பினர் உலகில் குளோனிங் உயிர்களை உருவாக்குவதன் மூலமே மனிதன் அழியாத நிலையை (Eternal) அடையலாம் என்பது இவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இது என்ன புது ரீலாக இருக்கிறதே? தொடர்ந்து குளோனிங் நடைபெறுகிறதா? இந்த நூற்றாண்டின் குளோனிங் முறைக்கும் திருக்குர்ஆனின் வசனத்திற்கும் என்ன தொடர்பு..?
தொடர்ந்து ஆராய்வோம்..!
“கப்ளிசேட்”


You must be logged in to post a comment.