திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

இரும்பின் அதிசயம்..!

அத்தியாயம் 44

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும், தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.

(திருக்குர்ஆன் 57:25)

இரும்பு வானிலிருந்து இறக்கப்பட்டது என்று திருக்குர்ஆன் தெளிவாக கூறுகிறது. இன்று நமக்கு மண்ணிலிருந்தே இரும்பு கிடைப்பதால் இந்த செய்தி ஆச்சரியமாக இருக்கிறது. இதுதான் இரும்பு என்று மனிதன் அறியாமலேயே ஆதி மனிதன் இரும்பை பயன்படுத்தி உள்ளான். தொல்பொருள் ஆய்வாளர்கள், ஆதிமனிதன் பயன்படுத்திய பல இரும்பாலான உபகரணங்களை அவர்களின் கல்லறைகளில் இருந்து கண்டெடுத்துள்ளனர் அதனை ஆராயும்போது, அந்த உபகரணங்களில்
இரும்புடன் சேர்த்து நிக்கல், கோபால்ட் போன்ற,பூமியில் மிகமிக அரிதாகவே உள்ள உலோகங்களும், கலந்திருப்பதை
கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பூமியில் இருந்து கிடைக்கும் இரும்பில், கோபால்ட் இருப்பதில்லை. ஆனால் விண்ணிலிருந்து பூமியில் விழும் விண்கற்களில் கோபால்ட் அதிகமாக உள்ளது. அண்டவெளியில் இது மிக அதிகமாக உள்ளதை கண்டறிந்துள்ளனர். ஆகவே ஆதிமனிதன் விண்கற்களை எடுத்து ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். விண்ணிலிருந்து பூமிக்கு வரும் விண்கற்களில் இரும்பும் அதனுடன் 8% நிக்கலும், சிறிதளவு கோபால்ட்டும் காணப்படுகின்றன. சிலசமயம் 27%முதல்65% வரை நிக்கலின் அளவு இருப்பதும் உண்டு. அதோடு ஜெர்மனியம், காலியம்,இண்டியம், டங்ஸ்டன், போன்ற அரிதான உலோகங்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு தனிமங்களும் உருவாவதற்கு அதற்கேற்ற வெப்பம் இருக்க வேண்டும். இரும்பு உருவாவதற்கான வெப்பம் எப்போதும் பூமியில் நிலவவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆகவே இரும்பு பூமியில் உருவாகவில்லை எனில் பூமிக்கு வெளியிலிருந்துதான் வந்திருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகவே இரும்பு பூமியில் உருவான பொருள் அல்ல என்று நாஸா விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். வெப்பத்தின் தன்மையை பொறுத்து கார்பன், சோடியம், மெக்னீசியம்,நியான்,
அலுமினியம், சிலிகான்,ஈயம்,
பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் உருவாயின.30‌ கோடி டிகிரிவரை வெப்பமுடைய பல நட்சத்திரங்கள் பால்வீதியில் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் இருந்து எரிகற்கள் விழும்போது, அல்லது வால் நட்சத்திரங்கள் பூமியை நோக்கி விழும்போது, வளி மண்டலத்தில் அவை தடுக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.

அவற்றின் துகள்கள் பூமியில் வந்து விழுகின்றன. இப்படி கோடானுகோடி ஆண்டுகளாக பூமியில் விழுந்த துகள்களைத்தான் நாம் இரும்பாக எடுத்து பயன்படுத்துகிறோம். இரும்பை உருவாக்கும் ஆற்றல் பூமிக்கும், சூரியனுக்கும், சூரியக்குடும்பத்திலுள்ள
எந்தக் கோள்களுக்கும் இருந்ததில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப் போல நான்கு மடங்கு ஆற்றல் தேவைப்படும். இதுபோல வானில் வெடித்து சிதறும் இரும்புகள் அண்டவெளியில் மிதந்து பிறகு பூமியினால் ஈர்க்கப்பட்டு பூமியில் புதைந்திருக்கும். பூமியின் புறவோட்டில் 5%இரும்பாக இருக்கிறது. அது தனித்து இல்லாமல் வேறுபல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு நிலை உலோகமாகவே புதைந்திருக்கின்றது.

அதை பிரித்தெடுத்து, இரும்பாக வார்க்கிறார்கள். இன்றைய ஏராளமான பொருட்களின் உருவாக்கத்தில் இரும்பே முக்கியமானதாக பயன்படுகிறது. இப்போது அண்டவெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள், மோதி வெடிக்கும் போது ஏற்கனவே அண்டவெளியில் உள்ள அணுக்களுடன் சேர்ந்து தங்கமாகவும்,
பிளாட்டினமாகவும் உருவாகுவதாக கூறப்படுகிறது. இது வாயுவடிவில் ஹைட்ரஜன் உடன் சேர்ந்து முழு நட்சத்திரங்கள் கிரகங்களாக உருவாகும் போது, அதில் தங்கமும், பிளாட்டினமும் புதைந்து கிடக்கும் என்றும் அண்டவியலின் அதிசயங்களை அறிவியலாளர்கள்கூறுகின்றனர். திருக்குர்ஆனின் ஒரு அத்தியாயத்திற்கு பெயரே இரும்பு என்று உள்ளதையும், அதன் வசனத்தில் இரும்பையும், அதன் பயன் பாடுகளையும், தெளிவாக கூறியிருப்பது உலகிற்கு மிகப்பெரிய வழிகாட்டலாகும்.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!