திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

சிறப்பு மனிதர்கள்..!

அத்தியாயம் 42

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர். (திருக்குர்ஆன் 27:17)

ஆன்மீக ரீதியில் இறைவன் தனது தூதர்களுக்கு பல சிறப்புகளையும், அவர்களுக்கு சில அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றலை அளித்து இருந்தான். அந்த வகையில் நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு இறைவன் ஜின்கள், பறவைகள்,என பலவகையான படைப்புகளை கட்டுப்படுத்தவும், அவர்களோடு உரையாடல் நிகழ்த்த அதற்கான ஆற்றலையும் வழங்கி இருந்தான்.ஹுத்ஹுத் என்ற ஒரு பறவையோடு அவர்கள் நிகழ்த்திய உரையாடல்,மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அவர்கள் இட்ட கட்டளைகள் என அவர்களின் வரலாறு சுவராஸ்யமானது. மனிதனின் காதுகள் ஒரு குறிப்பிட்ட அளவு அதிர்வெண் கொண்ட சத்தங்களையே கேட்க முடியும். நன்கு செவித்திறன் உடைய மனிதால் 20hz லிருந்து 20khz வரை கேட்க முடியும் என்கிறார்கள். 20hz குறைவான சத்தத்தை Infrasonic என்கிறார்கள். பரிசோதனை கூடங்களில் எந்த சத்தமும் இல்லாத நிலையில் மனிதன் மிகக்குறைந்த, மற்றும் மிக அதிகமான சத்தங்களைக் கூட 12hz-28khz வரை கேட்கமுடியும் என்று கண்டுபிடித்துள்ளார்கள். நமது காதுகளில் வந்து அடையும் ஒலியை auditory canel 3hz விருந்து 12hz வரை அதிகப்படித்தி தருகிறது. எறும்புகள் பேசும் சத்தம் 1hz அளவில் இருந்தாலும்,3hz வரை எறும்புகள் எதிர்வினை ஆற்றுகின்றன என்று அறிவியளாளர் டர்னர் நிறுவினார். மேலும் எறும்பின் ஒருவகையான இலை வெட்டும் எறும்புகளும், messorAnts வகை எறும்புகளும், எழுப்பும் சத்தங்கள் சாதாரணமாக மனிதன் கேட்கும் வகையில் 18-20 khz க்குமேல் உள்ளதாக அறியப்படுகிறது. ABC Secince என்னும் அறிவியல் இதழ், Is there such a thing as a super hearer? என்ற கட்டுரையை 2012 ஆம் ஆண்டில் வெளியிட்டு இருந்தது. அதில் மிகக்குறைந்த சத்தத்தையும்,மிக அதிக சத்தத்தையும் கேட்கும் சிலர், மனிதர்களில் இருக்கிறார்கள். அவர்களை “Golden ears” என்று அழைக்கிறார்கள். அவர்களுக்கு “Super hearing” சாத்தியம் எனக் கூறப்படுகிறது. அவர்களால் எந்த உயிரினத்தின் மிகக்குறைந்த சத்தத்தையும், மிக அதிக சத்தத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்பதால் எறும்புகள் பறவைகள் என உயிரினங்களின் சத்தத்தை புரிந்து கொண்டு அதன் ஒலி வடிவிலேயே (sound type) பதிலும் அளிக்க முடியும் என்பது அறிவியல் கூறும் ஆச்சரியமான செய்தி. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பொருட்களை சாதாரணமாக பார்க்க முடியும். ஆனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதையும் “வெரோனிகா சைடர்” என்ற பெண் பார்ப்பார். குளிரடித்தால் மனிதர்களுக்கு கம்பளி தேவை. “விம் ஹாப்” என்பவரை ஐஸ் தொட்டியில் போட்டாலும், எவ்வளவு நேரமானாலும் தாக்குப்பிடிப்பார். அவரால் பனி கொட்டும் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் 7.4 கிலோ மீட்டர் வரை வெறுங்காலால் நடந்து செல்ல முடிந்தது. சாதாரண மனிதர்களுக்கு மத்தியில் வாழும் இவர்களை “Super Human “என்று அழைக்கிறார்கள். மனிதர்கள் பேசும் மொழியை கிளி போன்ற பறவைகள் புரிந்து கொண்டு திருப்பி பேசுகின்றன. நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு இறைவன் பல அற்புதங்களை அளித்து இருந்தான். அவற்றை நாம் அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்த முடியாது. இறைவனின் ஆணைப்படி நடக்கும் போது அங்கு அறிவிற்கோ அறிவியலுக்கோ வேலை இல்லை. ஆனால் வழமையாக நடக்கும் ஒன்று சிறப்பாக மாறுபட்டு நடக்கும் போது, அறிவியல் ஏன் என்று ஆராயும். இருப்பினும் இது எனது இறைவனின் அருட்கொடை என்று சுலைமான் (அலை) அவர்களே கூறுவது நமக்கான செய்தி.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!