திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

எறும்புகளின் புரிதல்கள்..!

அத்தியாயம் 41

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது.

(திருக்குர்ஆன் 27:18)

இந்த வசனத்தில், எறும்புகள் தங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை முன்பே உணர்ந்து கொண்டு சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி குறிப்பிடப்படுகிறது. எறும்புகளுக்கு மனிதர்களை இனம் காணும் அறிவு, தனக்கு வரக்கூடிய
ஆபத்துக்களை அறிந்து கொள்ளும்
அறிவு இருக்கிறதா என்ற கேள்விக்கு, இருக்கிறது என்கிறார்கள் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். ஜெர்மன் உயிரியல் துறை ஆய்வாளர் கேப்ரியல் பார்பெரிக்,தனது சக ஆய்வாளர்களுடன் மூன்று ஆண்டுகள் சிவப்பு எறும்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து இந்த தரவுகளை தெரிவிக்கிறார். பகல் நேரம் முழுவதும் இரைதேடும் எறும்புகள், இரவு நேரத்தில் தங்கள் புற்றில் ஓய்வெடுக்கின்றன. ஆனால் பூகம்பம் ஏற்படப்போவதை எறும்புகள் ஒருநாள் முன்பாகவே அறிந்துகொண்டு அந்த புற்றிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி விடுகின்றன. பிறகு சூழல்கள் சரியான பிறகு புற்றுக்கு திரும்பி விடுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எறும்புகள் மிகப்புத்திசாலியான கூட்டம் கூட்டமாக வாழும் சமூக அமைப்பை கொண்டவை என்று கூறப்படுகிறது. ஃபார்மிக்கா எறும்புகளால் 1முதல் 60 வரை எண்களை எண்ணமுடியும்(Count)
என்பது ஆச்சரியமான செய்தி. எறும்புகள் தங்கள் எடையை விட 50 மடங்கு எடையை சுமந்து செல்லும் ஆற்றலுடையது. இவைகளின் தசைகள் மனிதர்களின் தசைகளை விட இறுக்கமானவை என்று கூறப்படுகிறது. சிலவகை செடி, தண்டுகளின் வெற்றிடங்களில் குடியிருக்கும் எறும்புகள், அதன் சாற்றை உண்டு வாழ்வதோடு,அதற்கு நன்றிக்கடனாக அந்தச் செடிகளை புழு, பூச்சிகள் அழித்துவிடாமல் பாதுகாக்கிறது. எறும்புகளில் போர் செய்யும் எறும்புகள்
தங்கள் புற்றின் வாயில்களில் தலையை வைத்து அடைத்து எதிரிகள் வராமல் பாதுகாக்கிறது. பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எடைக்குச்சமமாக பூமியில் எறும்புகளின் எண்ணிக்கை உள்ளது. மேலும், பூமியில் ஒவ்வொரு மனிதனின் எடைக்குச்சமமாக 15 லட்சம் எறும்புகள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிற செய்தி ஆச்சரியமானது. முதலில் சாரணர் எறும்பு(Scout Ant) உணவைத் தேடி, கண்டுபிடித்து பாதி உண்டுவிட்டு நேர்கோட்டில் தனது இருப்பிடத்தை நோக்கி திரும்பும். அப்படி திரும்பும்போது, ஃபெரோமோன்‌ (Pheromone) என்னும் நறுமணத்தை பீச்சிக்கொண்டே செல்லும். இதனை மோப்பம் பிடித்தே மற்ற எறும்புகள் சாரை சாரையாக அந்த உணவை நோக்கி செல்கின்றன. எறும்புகள் தங்களுக்குள் சில வகைகளில் பேசிக்கொள்கின்றன அவை வாசனைகள் (ஃபெரோமோன்கள்) தொடுதல் (உணர்கொம்புகள் மூலம்)
மற்றும் அதிர்வுகள் மூலம் பேசிக்கொள்கின்றன உணவு இருக்கும் இடம்,ஆபத்துகள் ஆகியவைகளை பரிமாறிக் கொள்கின்றன. எறும்புகளின் இந்த அறிவு, ஆபத்தை முன்கூட்டியே உணரும் திறன், தங்களுக்குள் செய்திகளை கடத்திக் கொள்ளும் திறன் ஆகியவைகள் இன்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகள், ஒரு பெரும்படை வருவதை எச்சரித்ததாக கூறும் திருக்குர்ஆனின் வசனத்தை உண்மைப் படுத்துகிறது.

எறும்புகள் பேசியதை
கேட்க முடியுமா?

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
தொடர்ந்து ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!