திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

கருவறை ஒரு அதிசய தங்குமிடம்..!

அத்தியாயம் 40

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

(அல்குர்ஆன் 23:14)

கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளை
விவரிக்கும் திருக்குர்ஆன் வசனம்,
“பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்”என்று கூறுவதில் ஆழமான அறிவியல் செய்தி இருக்கிறது. கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார்மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தை பெறுவதில்லை.  சதைப்பிண்டமாகவே
வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும்,மனிதனின் கருவும் இந்த காலகட்டத்தில் ஒரேமாதிரியாகவே
அமைந்திருக்கும். மூன்று மாதம் கழிந்தபிறகுதான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கே அமையவேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து உருவம் உண்டாகும். இதைத்தான் திருக்குர்ஆன் “வேறுபடைப்பாக மாற்றினோம் என்று குறிப்பிடுகிறது.” கரு உருவானதிலிருந்து கருவின் வளர்ச்சி நடைபெறுகிறது. இது ஒரு வகையான ஆற்றலினால் நடைபெறுகிறது. கருவில் சில சிறுசிறு வளர்ச்சிகள் உருவானாலும், முழு உறுப்புகள் வளர்ச்சி என்பது மூன்று மாதங்களுக்கு பிறகுதான் ஏற்படும்.120 நாளின் முடிவில்தான் அந்தக் கருவிற்கு உயிர் கொடுப்படுவதாகக்
கூறப்படுகிறது. ஆகவேதான் கருவிலுள்ள குறைபாடுகளை
கண்டறிய நான்கு மாதங்கள் கழித்து ஸ்கேன் எடுக்கப்படுகிறது. பன்னிரண்டாவது வார இறுதியில் தான் சிசு ஆணா, பெண்ணா என்று கூற இயலும். ஆணின் நுத்ஃபா என்ற உயிரணு கருவின் முதல் மூலப்பொருளாகிறது இது பெண்ணின் சினைமுட்டையுடன் இணைந்த கலவைதான் இரண்டாவது மூலப்பொருளாகும். ஆணின் உயிரணுவான நுத்ஃபா என்ற முதல் மூலப்பொருளும், பெண்ணின் சினை முட்டையும் கலந்த அலக் என்ற‌ இரண்டாவது மூலப்பொருளும் ஒன்றோடு ஒன்றிணைந்து இருப்பதை
“கருவுற்ற சினைமுட்டை “என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு திருக்குர்ஆன், உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத்துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும்,பின்னர், முழுமைபடுத்தப்பட்டதும், முழுமை படுத்தப்படாததுமான சதைக்கட்டியாலும், படைத்தோம். நாம் நாடியதை கருவறைகளில் குறிப்பிட்ட காலம்வரை நிலைபெறச் செய்கிறோம்.பின்னர் உங்களை‌ குழந்தையாக வெளிப்படுத்துகிறோம் என்ற வசனங்கள் வெளிப்படையாக நாம் அறிந்த செய்திகளை அறிவிக்கிறது. உடல் அன்னியப்பொருட்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாது.அன்னியப்பொருட்களை அது உடனடியாக உடலிலிருந்து வெளியேற்றிவிடும். (உதாரணம் தும்மல்.) இதற்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஒரு குறிப்பிட்ட காலம்வரை கருவறை ஏற்றுக்கொள்கிறது. பிரசவ நேரத்தில் கருவறை சுருங்கி விரிவதாலேயே பிரசவவலி ஏற்படுகிறது. இதையே திருக்குர்ஆன், “ஒவ்வொரு பொருளும் ‌குறிப்பிட்ட காலநிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளது என்று குறிப்பிடுவதாக கூறுகிறார்கள்” பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு ஆண்டுகள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மற்றொரு வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்து மொத்தம் முப்பது மாதங்கள் என்று குறிப்பிடுகிறது. அதில் பாலூட்டும் காலங்கள் 24 மாதங்கள் கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதமாகும்.இதை ஆராயும்போது திருக்குர்ஆன் வசனங்களின் அற்புதங்கள் புரிகிறது. குழந்தை பிறக்கும் காலம் 36-40 வாரங்கள்.அதாவது 9-10 மாதங்கள் என்பது நடைமுறையாக இருக்கிறது. இதில் கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாத இறுதிவரை உள்ள கருவறையிலுள்ள கரு ஒரு இறைச்சி துண்டைப் போலவே காணப்படுகிறது. நான்காவது மாத ஆரம்பங்களிலேயே மனிதன் என்று‌ சொல்வதற்குரிய அடையாளங்களுடனும், உறுப்புகளுடனும் கருவளரத் துவங்குகிறது. இதுபோன்று மனித உருவங்களில் கருவறையில் தங்கி‌இருக்கும் காலம் ஆறு மாதம்தான். இதனை கருத்தில் கொண்டே பால்குடி பருவம் 24+ கருவின் காலம் 6 =30 மாதங்கள் என்ற கூறுகிற திருக்குர்ஆனின் வரிகள் ஆச்சரியமும்
அற்புதமும் அல்லவா? திருக்குர்ஆன் மிக நுட்பமாக இந்த கருவின் வளர்ச்சி நிலைகளை விவரிப்பது, 1447 ஆண்டுகளுக்கு முன்பே இதனை மிகத்தெளிவாக கூறியிருப்பது இது இறைவனின் வேதம் என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரமாகும்.இந்த ஒப்பீடுகளில் மருத்துவ ரீதியான கருத்துக்களை பகிர்கிறோம். இதை திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்வதாக புரிந்து கொள்ளக்கூடாது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை‌ மற்றொரு புதிய தகவலை
ஆராய்வோம்..!

 

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!