திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!

உலகின் அதிசய நீர் ஊற்று..!

அத்தியாயம் 38

“அதில் தெளிவான சான்றுகளும்,மகாமே இப்ராஹீமும் உள்ளன.அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்விற்காக ஹஜ் செய்வது சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்கு கடமை.யாரேனும்(ஏக இறைவனை)
மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.”
(அல்குர்ஆன் 3:97)

இந்த வசனம் நேரடியாக “ஜம்ஜம் ஊற்றை ” பேசாவிட்டாலும், மக்கமாநகரின் சிறப்புகளையும்,
அந்தப்பகுதிகளின் சிறப்புகளையும், அங்கு சென்று வருபவர் வெற்றி பெற்றவர் என்பதையும் குறிப்பிடுகிறது. இந்தப்பகுதியில் எல்லாமே புனிதமும்,
அருளும் நிறைந்த இடங்களாகும். அதிலுள்ள ஜம்ஜம் நீருற்று ஆன்மீக மக்களுக்கு அருளாகவும், இன்றைய அறிவியலுக்கு ஆச்சரியமாகவும் உள்ளது. மனிதன் இன்னும் கண்டறியாத பல சான்றுகள் மக்கமாநகரில் இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில்‌ முக்கியமானது ஜம்ஜம் என்னும் கிணறாகும். நபி இப்ராஹீம்(அலை)
அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தனது மனைவி ஹாஜரா (அலை)மற்றும் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களயும், மக்கள் குடியிருக்காத வெட்டவெளில் விட்டுச் சென்றபோது, குழந்தை இஸ்மாயில் (அலை) தண்ணீருக்காக தவித்தபோது, வானவர் ஜிப்ரயில் (அலை) வந்து அந்த இடத்தில் அல்லாஹ்வின் அருளால் ஒரு நீருற்றை ஏற்படுத்தினார். அதுதான் ஜம்ஜம் கிணறு என்று அறியப்படுகிறது. இந்தக் கிணறு 18 அடி அகலமும்,14 அடி நீளமும், கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் 5 அடியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹஜ் காலங்களில் கூடும்சுமார் 30லட்சம் மக்களும், மற்ற நாட்களில் உம்ரா செய்யக் கூடும் மக்களும் அந்த நீரை
குடி நீராக பயன்படுத்துகிறார்கள். மேலும் அவர்களின் நாடுகளுக்கு ஒவ்வொருவரும் குறைந்தது 20 லிட்டர் நீரை எடுத்து செல்கிறார்கள். பாலைவனத்தில் குறைந்த ஆழத்தில் அமைந்திருக்கும் இந்த கிணற்றுக்கு அருகில் ஏரிகளோ, குளங்களோ, (water feeder) ஏதும் இல்லை. இந்தக் கிணற்றிலிருந்து இடைவிடாமல் பல லட்சம் மக்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுவது முதல் அற்புதமாகும். எந்த ஊற்றாக இருந்தாலும் சில,பல
வருடங்களில் செயலிழந்து விடும். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாமல் செயல்படுவது இரண்டாவது அற்புதம். பாசி படர்வது, கிருமிகள் உற்பத்தி என ஏதும் இல்லாமல் இருப்பதும், எந்த மருந்துகளும் கலக்காமல் தன்னைத்தானே இந்த நீரூற்று பாதுகாத்துக் கொள்வதும் மூன்றாவது அற்புதம். 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆய்வகத்தில் ஜம்ஜம் கிணற்று நீரை சோதித்து பார்த்தபோது, இது குடிப்பதற்கு மிகவும் சிறந்த நீர் எனவும், உலகிலுள்ள மற்ற நீர்களை விட இதில்கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதும் தெரியவந்தது. அதுவே மிகுந்த புத்துணர்ச்சியை கொடுக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நீரிலுள்ள ஃபுளோரைடு உப்பு கிருமிகளை அழிக்கவல்லது. நாள்தோறும் 9,50,400 லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்ஜம் நீரில் 835 mg/லிட்டர் தாது உப்புக்கள் உள்ளது. மற்ற தண்ணீரில் 350-400mg/லிட்டர் தாது உப்புக்களே உள்ளது. ஜம்ஜம் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் இதை நின்று பருகுவது ஆரோக்கியமானது என்கிறது மருத்துவ குறிப்புகள். சவுதியில் ஜம்ஜம் நீரை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் Saudi Geological survay ஜம்ஜம் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கான அளவுகளை நிர்ணயித்து Grand masque நிர்வாகத்திற்கு தெரிவிக்கிறது. அதன்படியே தினசரி நீர் எடுக்கப்படுகிறது. உலகத்திலேயே
தண்ணீர் வரும் வழிகளே இல்லாத பாலைவனத்தில், இவ்வளவு அற்புதங்களை தாங்கி நிற்பதாலேயே திருக்குர்ஆன் அந்தப்பகுதியை “ஒரு அத்தாட்சி”என்று கூறுகிறது. இன்றுவரை அறிவியலுக்கும் இது ஒரு அற்புதந்தான். இறைவனின் மிகப்புனிதமானகஃபா ஆலயம் இருப்பதும், அதனருகில் ஸஃபா,மர்வா குன்றுகள் என ஏராளமான இறைவனின் அருள் பெருகும் இடங்களும், அமைந்துள்ளன. கஃபா ஆலயத்திற்கு நேர்மேலே வானத்தில் இறைவனின் ஆலயங்கள் இருப்பதாக சொல்லப்படுவதும், உலகில் அங்கு தொழுதாலே, மற்ற பள்ளிவாசல்களை விட நன்மைகளின் அடர்த்தி அதிகம் என்பதும், உலகின் தியாகத்தை நினைவு படுத்தும் தியாகத்தின் அடையாளமாகவும், பல லட்சம் மக்கள் இடைவிடாது அதனை சுற்றிக்கொண்டே இருக்கும் அதிசயமும், ஆன்மீகமும், அறிவியல் அற்புதங்களும் கலந்த நேரடி அத்தாட்சிகளாகும். உலகிலேயே ஜம்ஜம் கிணற்றைப்போல எந்தநீர்வழிப் பாதைகளும் (Water feeder) இல்லாமல் பல அறிவியல் அத்தாட்சிகளை தாங்கி நிற்கிற ஒரே நீருற்று இதுவாகத்தான்
இருக்கிறது.

திருக்குர்ஆனின ஒளியில் விஞ்ஞானம்..
நாளை மற்றொரு
புதிய செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!