திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!

மலட்டுக்காற்று!

அத்தியாயம் 36

ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம் அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை. (திருக்குர்ஆன் ‌‌ 51:41,42)

ஆது என்ற சமூதாயம் மலட்டுக்காற்றால் அழிக்கப்பட்டதை இந்த வசனம் கூறுகிறது.மலட்டுக்காற்று என்பதை ஆக்ஸிஜன் இல்லாத காற்று என்று கூறலாம். மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜன் வேண்டும். காற்றிலுள்ள ஆக்ஸிஜனையே சுவாசிக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்தது.87% உயிரினங்கள் அப்போது இறந்தன. இந்த கூட்ட மரணத்தை, (great dying) பெர்மியன் காலத்தின் (மிகப்பழைய காலம்) பேரழிவாக கூறப்படுகிறது. இதற்கு காலநிலை மாற்றமே காரணமாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சைபீரியப்பகுதியில் வெடித்த எரிமலையின் புகை மூட்டங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பூமியை மூடியதாகக் கூறப்படுகிறது. எரிமலையில் இருந்து கிளம்பிய புகை மூட்டத்தால் காற்றில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பூமியிலுள்ள பெரிய உயிரினங்களும், கடலிலுள்ள பல உயிரினங்களும் மூச்சுத்திணறி இறந்தன. வெப்பநிலை உயர்ந்ததால், கடல்வாழ் உயிரினங்களின் பசி அதிகரித்தது. அதனால் ஆக்ஸிஜன் பயன்பாடு அதிகமானது. கடலில் படிப்படியாக ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த பழைய வரலாற்றை அடிப்படையாக வைத்து, வரும் காலத்தின் நிலைகளை கணிணி மாதிரிகளை உருவாக்கி ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். இப்போது ஏராளமான சுற்றுச்சூழல் மாறுபாடுகளை மாசுக்களை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருட்கள், (நிலக்கரி போன்றவை) மேலும், உமிழப்படும் பசுமைக்குடி வாயுக்கள், (கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், ஓஸோன்,நைட்ரஸ் ஆக்சைடு, நீராவி,குளோரோ ஃபுளுரோ கார்பன்கள்) ஆகியவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்ந்தால், பூமியில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து கடுமையான பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இதுபோன்ற நச்சு வாயுக்கள் தொடர்ந்து உமிழப்பட்டு பூமியின் வெப்பநிலை அதிகரித்தால், நிலம் மற்றும் கடலில் வாழும் உயிரினங்கள் பேரழிவாக மரணங்களை சந்திக்கும். குறிப்பாக கடலில் உயிரினங்களின் ஆக்ஸிஜன் பயன்பாடு 70% அதிகரிக்கும்.கடலின்40% பகுதிகளில் ஆக்ஸிஜன் சிறிதும் இல்லாத நிலை ஏற்படும். பூமியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க காற்றில் ஆக்ஸிஜன் அளவுகள் குறையும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். அமெரிக்க வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், அதுபோன்ற மோசமான காலநிலையை நோக்கி உலகம் நகர்கிறது என்று கூறுகிறார்கள்.சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் அதிகரித்து பூமியில் கார்பன்டை ஆக்ஸைடு அளவு குறைந்து, தாவரங்கள் அழிந்து ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறையும்.பூமியின் ஆரம்பகாலங்களில் ஆக்ஸிஜன் அளவு மிகக்குறைந்த அளவில் இருந்தது.மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் இவைகள் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது.இப்போது பயன்படுத்தப்படும் பல நவீன வெடிகுண்டுகள் காற்றில் ஆக்ஸிஜனை இல்லாமல் ஆக்கி விடுவதால் உயிர்கள் அழியும்.இதுபோன்ற ஏராளமான ஆய்வுகளை செய்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மனிதர்களை எச்சரித்து கொண்டே இருக்கிறார்கள்.இதுபோன்ற ஆக்ஸிஜன் இல்லாத மலட்டுக்காற்று சமூகத்தை அழித்த வரலாறு திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, இன்று உண்மைப் படுத்தப்படுகிறது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!