திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
மன அழுத்தமும் மனச்சிதைவுகளும்..!
அத்தியாயம் 35
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (திருக்குர்ஆன் 13:28)
உலக அளவில் மனநல பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன. உலக அளவில் 28 கோடி மக்கள் மனச்சோர்வால் (Depression) பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் சுமார் 30 கோடி மக்கள் பதட்டக்கோளாறுகளால் (Anxiety Disorders) பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உலகில் நான்கில் ஒருவருக்கு தனது வாழ்நாளில் ஒருமுறையாவது மன நலப்பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது.இந்தியாவில் 10-15% மக்கள் லேசான மனக்கோளாறுகளாலும்,3% மக்கள் தீவிரமான மனநலப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநோய்களில் பலவகைகள் இருந்தாலும், அது ஏற்பட அடிப்படை காரணங்களாக, மன அழுத்தங்கள், சமூக பிரச்சினைகள்,
தனிமை,கோபம், பொறாமை,பதட்டம்,
பொருளாதாரம், சூழல்களை எதிர்கொள்ள பயம், மரபணு காரணிகள்,
மூளையின் வேதியல் மாற்றங்கள்,என கூறப்பட்டாலும், மேலும் பல்வேறு காரணங்களால் மனநோய்கள் ஏற்படுகின்றன. இன்றைய பரபரப்பான உலக இயக்கங்கள் மனிதனின் அமைதியை தொலைக்க வைக்கின்றன. எதிலும் நிறைவு கொள்ளாத மனநிலை நிம்மதியை இழக்க வைக்கிறது. இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு
மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறை நிபுணருமான டேவில் ரோஸ்மேரின் கூறுகிறார். இந்த ஆய்வு தொடர்பாக 159 பேரிடம் பல்வேறு வகையான சோதனைகளை நடத்திவிட்டு இந்த தரவை வெளியிட்டு இருக்கிறார். இதில் இறைவன் மீதான நம்பிக்கை உள்ளவர்களை விட,
இறைவன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிகம் மன அழுத்தத்தால் பாதிப்பதை கண்டறிந்தார். இன்றைக்கு நடைபெறும் 90% தற்கொலைகள் மன அழுத்தத்தாலேயே நடைபெறுகிறது. இன்றைய மனநல பயிற்சியாளர்கள் சுவாசப் பயிற்சிகள், தியானம்(Meditation), மன நிறைவான சிந்தனைகளை உருவாக்குவது, நேர்மறை கருத்துக்களை பகிர்வது, நன்றியுணர்வை வெளிப்படுத்த பயிற்சி அளிப்பது மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவான பேச்சுக்கள், நினைப்பதை மனம்விட்டு வெளிப்படுத்துதல், எனவும், அமைதியான சூழல், நல்ல நறுமணங்கள், ஒரே செயலை கவனம் செலுத்தி செய்தல் (Concentration), என்று மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனநல பயிற்சியாளர்கள் பல்வேறு ஆலோசனைகளை தருகிறார்கள்.
இவைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிற போது அது மனச்சிதைவாக மாறி மனநோய்கள் தீவிரமாகி பல்வேறு தீவிர நிலைகளுக்கு ஆளாகிறார்கள். இவர்களே வன்முறை செய்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்கள் அமைதிப்படுத்த அதற்கான மருந்துகளை உட்கொள்ள வைத்து தூங்க வைத்து விடுகிறார்கள். எல்லா மதங்களும் பிரார்த்தனைகளின் மூலம் மனதிற்கான அமைதியை பெற வழிகாட்டுகின்றன. திருக்குர்ஆனின் அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்று அழுத்தமாக கூறுகிற வசனம் மிகுந்த ஞானம் மிக்கது. அல்லாஹ்வை நினைவு கூறும்போது, இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிக்கும் போது, இதற்கான தீர்வுகள் எளிதாக இருக்கும்.
தொழுகைகளை அந்தந்த நேரத்தில் நிறைவேற்றும் போது நேர மேலாண்மை, ஓர்மை,உயிர்ப்பு, வசீகரம், உடற்பயிற்சி,
மன அமைதி எல்லாம் கிடைக்கிறது. திக்ருகள்,(ஓர்மை,அமைதி, ஒன்றிவிடுதல், கரைந்து விடுதல்) திருக்குர்ஆன் ஓதுதல் (வசீகரம், இனிமை, நிம்மதி) துஆக்கள் (தான் நினைப்பதை எந்த தயக்கமும் இல்லாமல் படைத்தவனிடம் முறையிடுதல்) என அல்லாஹ்வை தொடர்ந்து நினைவு கூறும் நிலைகளில் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தெளிவும் நிச்சயம் ஏற்படும். இது போன்ற பயிற்சிகள் ஏராளமான மன அழுத்தங்களை நிச்சயம் குணமாக்கும். இன்றைக்கு இதுபோன்ற மனம் சார்ந்த பயிற்சிகளை அளிக்கவே பல்வேறு மன அமைதி பயிற்சி நிலையங்களை அமைத்து ஆயிரக்கணக்கில் கட்டணங்களை பெறுகிறார்கள். மனநோயாளிகளுக்காக இயங்கும் ஹோம்கள் நோயாளிகள் மீது வன்முறைகளையும் பயன்படுத்துகிறார்கள்.குடும்பத்தார்கள் எப்படியோ பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று மனநோயாளிகளை ஒதுக்கிவிட நினைப்பது மிகப்பெரிய பாவச்செயலாகும். மனநோயாளிகளை
அமைதியான சூழலில் தொடர்ந்து ஆன்மீக வணக்கங்களை கடைபிடிக்க வைத்து, அவைகளில் அவர்களை கவனம் செலுத்த வைத்தால், ஓரளவு நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.
அல்லாஹ்வை தொடர்ந்து நினைவு கூறுவதே மிகச்சிறந்த நிம்மதியும், மகிழ்ச்சியுமாகும்.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









