திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

காலத்தின் மாயாஜாலம்..!

அத்தியாயம் 34

(முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாக தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான்.உமது இறைவனிடம் ஒருநாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.(அல்குர்ஆன்22:47)

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு
என்ன? என்பதை எளிமையாக புரிந்து கொள்வோம். திருக்குர்ஆனின் 22:47,மற்றும்32:5 ஆகிய வசனங்களில் இறைவனின் ஒருநாள் என்பது, உங்கள் நாட்களில் ஆயிரம் வருடங்கள் அளவுள்ளது எனவும், திருக்குர்ஆனின் 70:4, வசனத்தில் இறைவனின் ஒருநாள் என்பது, உங்கள் வருடங்களில் ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனவும் கூறப்படுகிறது. இந்த இருவசனங்களும் ஒன்றுக்கொன்று முரணாகத் தெரிகிறதே?என்று யோசிக்கிறபோது, சார்பியல் கோட்பாடு என்ற இயற்பியல் விதி இதனை தெளிவுபடுத்துகிறது. பொதுவாக நாட்களின் அளவுகள் மாறாது. மாற்றமுடியாது என்றே மக்கள் நம்பி இருந்தார்கள். ஆனால் ஒருவரின் பயணவேகத்தைப் பொறுத்து ஒருநாளின் அளவு மாறுபடும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன் ஐன்ஸ்டீன் என்ற அறிஞர் கண்டுபிடித்தார். ஒருவன் ஒளிவேகத்தில் மேல்நோக்கி ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ வேகத்தில் பயணம் செய்து,ஐம்பது வருடங்கள் செய்யவேண்டிய வேலையை செய்து விட்டு பூமிக்கு திரும்பினால் பூமியில் சிறிது நேரமே கழிந்திருக்கும். நபிகள் பெருமகனார் (ஸல்…) அவர்கள் மிஃராஜ் பயணம் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் (படுக்கையின் சூடு ஆறுவதற்குள், தாழ்ப்பாள் ஆடி நிற்பதற்குள்) வந்தார்கள் என்றால் இந்த சார்பியல் தியரிப்படி சாத்தியம் என்பதை இன்றைய விஞ்ஞானம் நிரூபிக்கிறது.

ஒரு வசனத்தில் ஒருநாளை ஆயிரம் வருடங்கள் எனவும், மற்றொரு வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்கள் எனவும் குறிப்பிடப்படுவதையும் சார்பியல் தத்துவம் சரி என நிரூபிக்கிறது. ஒரு நாளின் அளவு ஐம்பதாயிரம் வருடங்கள் எனக்கூறும் வசனத்தில், ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் பூமியிலிருந்து இறைவனிடம் மேலேறிச்செல்லும்
வேகம் பூமியின் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு அவர்களின் ஒருநாள் சமம் என்ற கருத்தில் வருவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். வானவர்கள் ஒருநாளில் சென்ற தூரத்தை அடைய பூமியின் கணக்கில் ஐம்பதாயிரம் வருடங்கள் பயணிக்கவேண்டும். ஆனால் மற்றொரு வசனத்தில் ஒரு நாளின் அளவு ஆயிரம் வருடங்கள் பயணத்தொலைவு என்று வருவது,இறைவனின் கட்டளை பூமியை அடைந்து அது மீண்டும் திரும்பிச் செல்வதற்கான வேகத்தை குறிக்கிறது. வானவர்களின் வேகம், இறைவனின் கட்டளைகளின் வேகத்தைவிட 50 மடங்கு அதிகமாக உள்ளது. இறைவனின் கட்டளையை நிறைவேற்ற அதை நிறைவேற்றும், சுமந்து செல்லும், வானவர்களின் வேகம், இறைவனின் கட்டளைகளின் வேகத்தை விட அதிகமாக இருக்கவேண்டும் என்பதை இந்த வசனங்கள் அறிவிப்பதின்‌‌ மூலம்,திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதும் அதில் எவ்வளவு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டாலும், முரண்பாடே காணமுடியாது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இன்னும் நமக்கு எளிமையாக புரிய  தோனி அடித்த பந்து
சிக்சராக மாறுவதை உணர நமக்கு ஆறு வினாடி ஆனது. ஆனால் ஆல்ஃபா கிரகவாசி அதே சிக்சரை ஒரு வினாடிக்கு குறைவான நேரத்தில் உணர்ந்து கொள்வதைப்போலதான் காலமும் மாறுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். வேதனையை அவசரமாக தேடும் மக்களை குறிக்கும் மேலுள்ள திருக்குர்ஆன் வசனம் இறைவனின் இந்த காலத்தின் நீளத்தை அறியும்போது, தண்டனையை தாமதப்படுத்துவதை உணர முடிகிறது.
இறைவனின் கருணையை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் தொடர்ந்து,லைலல்துல் கத்ரு இரவின் அடர்த்தியைக் கூறும் வசனம், ஆயிரம் மாதங்களை விட அந்த இரவு எவ்வாறு சிறந்தது என்பதும், பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் எல்லாம் முஸ்லிம்களுக்கு ஆன்மீக செய்தியாக இருக்கிறது.பிற சமூக மக்களின் புரிதலுக்காகவே இதுபோன்ற சில ஒப்பீடுகளை செய்கிறோம். இருப்பினும் அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

திருக்குர்ஆனின் ஒளியில்விஞ்ஞானம்…!
நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!