திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

சார்பியல் கோட்பாடு (Relativity theory)

அத்தியாயம் 33

“வானவர்களும், ரூஹும், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒருநாளில் அவனிடம் ஏறிச் செல்வர்.”(அல்குர்ஆன் 70:4)

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும்
இடையே அனல் பறக்கும் T 20 match நடைபெறுகிறது.இந்தியா வெற்றி பெற கடைசி பந்தில் ஆறு ரன்கள் (ஒரு சிக்சர் வேண்டும்). இந்தியாவின் சார்பில் தோனி பேட்டிங். பாகிஸ்தானின் சிறந்த ஆஃப்ஸ்பின்னர் சையத் அஜ்மல் கடைசிபந்தை வீசவருகிறார்.ஸ்டேடியமே அதிர்கிறது.வீசுகிறார்.தோனி முன்னே வந்து நேராக அப்படியே தூக்கி அடிக்கிறார்‌ ஆஹா சிக்ஸர் இந்தியா வெற்றி. நான் பந்து பறந்த திசைக்கு நேர்எதிர்த்திசையில் அமர்ந்திருந்தேன். என் நண்பன், பந்து பறந்து வந்து விழுந்த இடத்தில் அமர்ந்து இருந்தான். பந்து பறந்துவிழ ஆறு வினாடி ஆனதை நானும் என் நண்பனும் ஒருசேர கடிகாரத்தில் பார்த்து தெரிந்துகொண்டோம். எங்கள் இருவரின் காலமும்(Time) வெளியும் (Space ) ஒன்று. ஆகவே இருவருக்கும் ரிசல்ட் ஒன்று. இதே நேரத்தில் ஒருவிண்வெளி ஓடத்தில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தோனி விளையாட்டை பார்க்கவந்த ஆல்ஃபா கிரகவாசி பந்து பறந்து சென்றதை ஒரு வினாடிக்கு குறைவான நேரத்தில் (தோராயமாக) உணர்ந்திருப்பார். இங்குதான் ஐன்ஸ்டீன் வருகிறார். காலம் பூமிவாசிக்கும், ஆல்ஃபா கிரகவாசிக்கும்,
ஒன்றல்ல என்கிறார். காலம் சார்பியல்‌ தன்மை (Relativity)கொண்டது என்கிறார்.

ஒரே காலம் பூமி வாசிகளுக்கு ஆறு வினாடி யாகவும், ஆல்ஃபா கிரகவாசிக்கு ஒரு வினாடிக்கு குறைவாகவும் இருக்கிறது. இதுதான் சார்பியல் தத்துவம்‌(Relativity theory). இது காலத்தையும் வெளியையும் (Time&Space) புரிந்து கொள்ள கற்பனை சம்பவம். விழுப்புரம் ஜங்கசனில் நீங்கள் பிரயாணம் செய்யும் ரயில் நிற்கிறது. உங்களின் ரயிலை அடுத்து இரண்டு பிளாட்பாரம் தள்ளிநின்ற‌ ரயில் உங்களுக்கு எதிர்திசையில் 10கி.மீ வேகத்தில் நகர ஆரம்பிக்கிறது. சிறிதுநேரம் கிளம்பியது உங்கள் ரயிலா? அருகிலிருந்த ரயிலா? என்பது உங்களுக்கு புரியாது. உங்கள் பிளாட்பாரத்தை நன்றாக பார்த்தால், உங்கள் ரயில் நிற்பதும்,உங்கள் எதிர்பிளாட்பாரம் காலியானதில் இருந்து அந்த ரயில் சென்றதும் தெரிகிறது. உங்கள் ரயிலுக்கும் எதிர் ரயிலுக்கும் பத்துகி.மீ வேகம் தான்‌ வித்தியாசம். அவரவர் திசையில் அவரவர் பயணித்தாலும், உங்களின் நேரமும், எதிர் ரயிலில் செல்பவரின் நேரமும் ஒன்றாகவே இருக்கிறது.

காலமும்,வெளியும் ஒன்றாக இருப்பதால்
அவரின் நேரமும், உங்களின் நேரமும் (Time) ஒன்றாகவே இருக்கும். இதுதான் சார்பியல். நீங்கள் ஒரு வினாடிக்கு ஒருலட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் ராக்கெட்டில் ஏறி கையிலுள்ள டார்ச்விளக்கை அடித்தால்,ஒளி வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ வேகத்தில் செல்லும். (ஒளி ஒரு வினாடியில் பயணிக்கும் தூரம்) உங்கள் ராக்கெட் ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் சென்றாலும், உங்களைவிட டார்ச் லைட்ஒளி மூன்று லட்சம் கி.மீ முந்திச் செல்கிறது. இதுதான் சிறப்பு சார்பியல் கோட்பாடு. நியூட்டனின் அடிப்படை விதிகளையும், இயற்பியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஐன்ஸ்டீனின் ‌சார்பியல் கோட்பாடுகளையும், லேசாக மனதின் ஓரத்தில் வைத்துக்கொண்டு, திருக்குர்ஆன் இவைகளை எப்படி சொல்கிறது? எப்படி கையாள்கிறது? சம்பவங்களால், தனது வரிகளின் உண்மைகளால், நம்மை எப்படி ஆச்சரியப்படுத்துகிறது எனப்பார்ப்போம். திருக்குர்ஆன் ஒளியில் காலம் உறைதலையும்
(Time freezing) தொடர்ந்து ஆராய்வோம்..!

கப்ளிசேட்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!