திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

பெரு வெடிப்பு கொள்கை (BigBank theory).!

அத்தியாயம் 32

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
(திருக்குர்ஆன் 21:30)

பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான். “விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். “விரும்பியே கட்டுப்பட்டோம்” என்று அவை கூறின.
(திருக்குர்ஆன் 41:11)

சமீபத்தில் புதுடெல்லியில்
Does God Exist?
(இறைவன் இருக்கின்றானா?)
என்ற ஒரு விவாதம்
நாத்திகரும்,பாடலாசிரியரும்,
சிந்தனையாளருமான
ஜாவித் அக்தர் அவர்களுக்கும்,

இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலானா முஃப்தி ஷாமில் நத்வி அவர்களுக்கும் ஒரு அறிவுப்பூர்வமான விவாதம் நடந்தது.

அதன் இறுதி சுற்றில் ஜாவித் அக்தர் அவர்கள் நான் இன்னும் சிறப்பாக பேசி இருக்க வேண்டும் என்று கூறியதில் இருந்து விவாதம் எப்படி முடிந்திருக்கும் என்று யோசித்து கொள்ளுங்கள்.

Finally Javed Akhtar lost his Bench
என்று சூசகமாக சொல்லி விடலாம்.

இதில் ஜாவித் அக்தர் அவர்கள் எழுப்பிய ஒரு கேள்வியே இங்கு முக்கியமான ஒரு தகவல். இந்த பிரபஞ்சமே இல்லாது இருந்த போது இறைவன் எங்கிருந்தான்? என்ன செய்துகொண்டு இருந்தான்? என்ற கேள்விக்கு, முஃப்தி மௌலானா ஷாமில் நத்வி அவர்கள் ஒரு அறிவுப்பூர்வமான பதிலை அளித்தார்கள்.இந்த பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பு காலமும் இல்லை நேரமும் இல்லை.பிரபஞ்சம் படைக்கப்பட்ட பிறகே காலமும் நேரமும் துவங்குகிறது என்ற அவர்கள் சொன்ன கருத்தாழம் மிக்க பதில் மிக முக்கியமானது. திருக்குர்ஆனின் மொழியில், வானம்,பூமி மற்றும் அதற்கு இடைப்பட்ட அனைத்தும் ஒரே பொருளாக இருந்தது.

அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகிறது. அதை தொடர்ந்து வானம் உருவாக்கப்பட்டதையும், தொடர்ந்து கோள்கள் உருவாக்கப்பட்டதையும் கூறுகிறது. உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்ட விதத்தை தெளிவாக கூறுகிறது. “ஆகுக” என்று ஒரு சொல்லில் ஒரு சொடுக்கில் அனைத்தையும் படைத்துவிட ஆற்றல்மிக்க அல்லாஹ்,வானத்தை,
கோள்களை பூமியை,அதிலுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக படைத்து மனிதன் வாழ அனைத்தையும் உருவாக்கி இறுதியில் மனிதனை படைத்து, மனிதனை தன்னை வணங்குவதற்காக படைத்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். மௌலானா ஷாமில் நத்வி அவர்களும், தனது உரையின் துவக்கத்தில் ஒரு நோக்கத்திற்காக இந்த உலகை படைத்த இறைவன் என்று கூறியே துவங்குகிறார். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கோட்பாடுகள் இந்த பெரு வெடிப்பு கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது.

ஐன்ஸ்டீனுடைய பொது சார்பு கோட்பாடு (General theory of Relativity),
மற்றும் அண்டவியற் கொள்கை (Cosmological principal), இந்த இரண்டும் அண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்பு,
மேற்படி பொருள்களின் திணிவுகளால்,
(Mass OR Density) பாதிக்கப்பட்டு வெளியும் (Space), காலமும் (Time) ஏற்பட்டதாக கூறுகிறது.

இந்த கோட்பாடே, பிரபஞ்சம் உருவான பிறகே காலமும் வெளியும் தோன்றியது என்பதை உணர்த்துகிறது.இன்றைய விஞ்ஞானம், இந்த பிரபஞ்சம் (Universe) முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்து சிதறியதால் அதன் துகள்கள் புகைமண்டலமாக பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பிறகு,அந்தத்துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும்,பல கோள்களாகவும்,
துணைக்கோள்களாகவும், கோடானுகோடி நட்சத்திரங்களாகவும்
உருவாயின. இந்த பெருவெடிப்பு 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பெல்ஜியத்தை சேர்ந்த வானியல் அறிஞர் ஜார்ஜ் லாமைட்ரோ, இந்த கருத்துக்களை முதன்முதலில் கூறினார். பெருவெடிப்பின் வெப்பத்தின் எச்சங்கள் இன்றும் பிரபஞ்சம் முழுவதும் இருப்பதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.பெருவெடிப்பின் காரணமாக காஸ்மிக் மைக்ரோவேவ் பரவல் உள்ளதை 1965 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். பெருவெடிப்பின் காரணமாக பிரபஞ்சம் விரிவடைவதை, எட்வின் ஹப்பிள் கண்டுபிடித்து விண்மீன் திரள்கள் விலகிச்செல்வதையும் சுட்டிக்காட்டினார். உயிருள்ள அனைத்து படைப்புகளுக்கும், நீர் ஒரு முதன்மைப்பொருளாக இருக்கிறது. இது இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டிய Subject.பெரு வெடிப்பு கொள்கைக்குப் பிறகு ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த காலம் (Time) ,வெளி (Space) என்று அறிவியலில் ஏராளமான முன்னேற்றங்கள். திருக்குர்ஆன் கூறிய பெருவெடிப்பு கொள்கையை இன்றைய விஞ்ஞானம் உண்மைப் படுத்துகிறது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
நாளை வேறொரு செய்தியை ஆராய்வோம்..!

கப்ளிசேட்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!