திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

தேனீக்களும்..! தேனும்..!

அத்தியாயம் 31

68, 69. “மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!” என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது. (திருக்குர்ஆன் 16:68,69)

தேனை தேடி தேனீக்கள் அதிக தொலைவுக்கு பயணிக்கின்றன. அதற்கு ஏராளமான குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகின்றன. வழிகளை எளிதாகக் கண்டு பயணிக்கும் திறன் தேனீக்களுக்கு உள்ளது என்று உயிரியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தேனீக்கள் எவ்வளவு தூரம் பயணித்தாலும், தங்கள் கூடுகளுக்கு சரியாக திரும்பி விடுகின்றன.

ஒரு மலரில் தனக்கு உரியஉணவு உள்ளதா என்பதை தனது மோப்ப சக்தி மூலம் கண்டுணர்ந்தே அந்த மலரை நோக்கி தேனீக்கள் பயணிக்கின்றன.

தேனீக்களின் மோப்ப சக்தியை விஞ்ஞானிகள் ஆராய்ந்து ஆச்சரியப் படுகின்றனர். தேனீக்களின் மோப்ப சக்தியை வைத்து கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களுக்கு பயிற்சி அளித்தனர். தேனீக்கள் மலர்களில் உள்ள திரவத்தை உறிஞ்சி தனது உணவாக உட்கொள்கின்றன. மலர்களில் உறிஞ்சி எடுத்து வரும் திரவத்தை, தேன்கூடுகளில் தேனீக்கள், தேனாக மாற்றுகின்றன என்று ஆரம்ப காலங்களில் நம்பப்பட்டன. தேனீக்கள் உணவாக உட்கொண்ட திரவம் தேனீக்களின் வயிறுகளில் ரசாயன மாற்றம் அடைந்து தேனாக வெளிப்படுகின்றது என்று ஆய்வாளர்கள் இப்போது தெரிவிக்கின்றனர். தேனீக்களுக்கு கழிவுகளை வெளியேற்றும் துவாரம் தவிர, தேன் வெளியேறுவதற்கான மற்றொரு துவாரமும் அமைந்துள்ளது. அந்த துவாரங்களில் இருந்து வெளியேற்றப்படும் தேன்தான் தேன் கூடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது .

தேனின் மருத்துவ குணங்களை, இன்று மருத்துவ உலகமும் ஏற்றுக்கொள்கிறது.

தேன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்றில் ஏற்படும் புண்களை விரைவில் ஆற்றுகிறது. இருமல், தொண்டைவலி, சுவாசப் பிரச்சினைகளை தீர்க்கிறது. இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்தத்தை சுத்திகரித்து, இதயத்தின் தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. தேன் பக்கவாதம் மற்றும் ஒவ்வாமை (Allergy),இரத்த அழுத்தம்,புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது. புண்கள், படுக்கை புண்கள், தீக்காயங்கள், பருக்கள் அனைத்திற்கும் தேன் சிறப்பான மருந்தாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். அதன்மூலம் கல்லீரல் (Liver) செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் தேனை பயன்படுத்துகிறார்கள். தேனில் புரோபோலிஸ் இருப்பதால் பாக்டீரியாக்களை கொல்லும்.தேன் இன்சுலின் அளவை அதிகரித்து செரோடோனின்‌ என்ற பொருளை வெளியிடுகிறது. இது மெலடோனின் என்ற‌ வேதிப்பொருளாக மாற்றப்பட்டு நல்ல தூக்கத்தை தருகிறது.தேனீக்கள் எவ்வளவு தொலைவு சென்றாலும், தடுமாறாமல் கூட்டிற்கு திரும்பி விடுவதும்,மலர்களிலிருந்து உணவை அருந்துவதும்,தேனீக்களின் வயிறுகளில் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து தேன் வெளிப்படுவதும், தேனின் மருத்துவ குணங்களும் என திருக்குர்ஆன் கூறிய அனைத்தும் இன்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

கப்ளிசேட்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!