திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர் ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

குகைவாசிகள்..!

அத்தியாயம் 3

கப்ளிசேட்

“அவர்கள் விழித்துக்கொண்டு இருப்பதாக நீர்நினைப்பீர்! ஆனால்அவர்கள் உறங்கிக் கொண்டு உள்ளனர்.அவர்களை வலப்புறமாகவும், இடப்புறமாகவும்,புரட்டுகிறோம்.அவர்களின் நாய் தனது முன்கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப்பார்த்து இருந்தால் அவர்களை விட்டு வெருண்டோடி இருப்பீர்!அவர்களால் அதிகம் அச்சமடைந்து இருப்பீர்!” (அல்குர்ஆன்18:18)

குகைவாசிகள் வரலாறு சுவராசியமானது. இறைவனின் ஆற்றலை அற்புதத்தை புரிந்துகொள்ள அதிசய நிகழ்வு.

 

இன்றைய அறிவியலுக்கு காரண காரியங்களை கற்றுத்தரும் நிகழ்வு.!

 

மனிதர்கள் எழாமல்‌ பல்லாண்டுகள் உறங்கமுடியுமா? பெருமானார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)
அவர்களின் காலத்திற்கு‌ முன் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவ (ஒரே இறை) கொள்கையில் உறுதியாக இருந்தனர். ஏகத்துவ கொள்கையை ஏற்காத அவர்களின் சமூகத்தினர் அந்த இளைஞர்களுக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்தனர்.

தமது சமுதாயத்தினரின் துன்பங்களால் பாதிக்கப்பட்ட அவர்கள் பயந்துகொண்டு ஒரு குகையில் போய் பதுங்கிக்
கொண்டார்கள்.பதுங்கிக்கொண்ட அவர்களை‌ அல்லாஹ் பல ஆண்டுகள் உறங்கவைத்தான். அவர்களின் தலைமுறையினர், அழிந்த பிறகு அல்லாஹ் அவர்களை எழுப்பினான்.

அவர்களை உறங்கவைத்தோம் என்று அல்லாஹ் கூறாமல் அவர்கள் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

திருக்குர்ஆனுக்கு‌ முன் தூங்குவதற்கு
காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று சொல்‌லும்‌ வழக்கம் இல்லை.

பிற்கால இலக்கியங்களில் தூக்கத்தை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்
பட்டாலும், திருக்குர்ஆனிற்கு முன் காலங்களில் பயன்படுத்தப்படாத புதிய சொல்லை அல்லாஹ் பயன்படுத்துகிறான். மனிதன் தூங்கும்போது கண்களின் இயக்கம் நின்றுவிடும். ஆனாலும் சிறுசப்தங்கள் கேட்டாலும் மனிதன் விழித்துவிடுவான். இடியோசை,மிருகங்களின் ஓலம், மற்றும் பிற சப்தங்களின் காரணமாக அவனால் தொடர்ந்து உறங்கமுடியாமல் போய்விடும். ஆகவே அவர்களது காதுகளில் எந்தச் சப்தமும் விழாமல் இருந்தாலே அவர்கள் நீண்ட காலங்கள் உறங்க முடியும் என்பதை ,அறிவுறுத்தவே திருக்குர்ஆன் அவர்களின் காதுகளில் திரையிட்டதாக புதிய சொல்லாடலை பயன் படுத்திக் கூறுவது மிகப்பெரிய ஆச்சரியமும்,
அத்தாட்சியுமாகும். குகைவாசிகளின் அறிவியல் அற்புதங்களையும், சாக்கடல் சாசன சுருள்களின் தொடர்புகளையும்
தொடர்ந்து ஆராய்வோம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!