திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

நவீன வாகனங்கள்..!

அத்தியாயம் 29

குதிரைகள், கோவேறுக்கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான். (திருக்குர்ஆன் 16:8)

உலகின் இறுதிநாள் வரை கண்டுபிடிக்கப்பட்டு வரப்போகிற நவீன வாகனங்களை வரவேற்கும் விதமாக இந்த வசனம் அமைந்துள்ளது. மனிதன் கால்நடையாகவே முதலில் பயணங்கள் செய்தான். இறைவன் திருக்குர்ஆனில் குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை ஏறிச்செல்லவும், மதிப்புக்காகவும் படைத்துள்ளதாக கூறுகிறான். இதுபோன்ற உயிருள்ளவற்றை மனிதன் இடங்களுக்கும், சூழலுக்கும் ஏற்ப பயன்படுத்த ஆரம்பித்தான். பாலைவனம் போன்ற மணல் பிரதேசங்களில் நீண்ட கால்களும், மணலில் நடக்க தேவையான உடல் அமைப்புகளும் தண்ணீரை சேமித்து வைத்து அருந்திக் கொள்ளும் அமைப்பையும் உடைய ஒட்டகங்களை மனிதன் பயன்படுத்தினான். இந்த நவீன காலங்களிலும்,பாலைவனக் கப்பலான ஒட்டகங்களை பாலைவன பயணங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். குதிரைகள்,கோவேறுக்கழுதைகள் மற்றும் கழுதைகளை மனிதன் தரையில் பயணங்களுக்கும்,மலையேற்றங்களுக்கும் பயன்படுத்தினான். ஆனால் நீர்நிலைகளில்,கடலில், ஆரம்பகாலங்களில் இருந்தே சிறு ஓடங்களில் துவங்கிய கடல்வழிப் பயணம்,இன்றைய நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை அதிவீனமான நீர்வழிப் போக்குவரத்து மாற்றமடைந்து கொண்டே போகிறது. இன்றைக்கு சாலைவழி செல்லும் வாகனங்கள் அடுத்தடுத்த பரிணாமங்களை (Genaration) நோக்கி மாறிக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல்,டீசல் போன்ற திரவ எரிபொருள் வாகனங்கள் கோலேச்சிவந்த நிலையில், இவைகள் சுற்றுச்சழலை மாசுபடுத்துகின்றன இவைகள் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் பல வாயுக்களால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. வாகனங்களின் அடுத்த எரி பொருளாக LPG ,CNG போன்ற வாயுக்கள் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு, அந்த வாகனங்களின் விற்பனை பெருக்கங்கள் சந்தையை ஆக்ரமித்தன.

பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயுக்கள், வளம் இல்லாத நாடுகளின் பொருளாதாரத்தில் இது அன்னிய செலாவணி கையிருப்பை பெருமளவில் குறைத்தது. இன்று மரபுசாரா எரிசக்தி என்ற காற்றாலைகள், சூரிய மின்சாரம் என்று இயற்கையிலிருந்து மின்சாரங்களை உற்பத்தி செய்வது அதிகரித்து இருக்கிறது. இது மின்சார உற்பத்தி செலவை பெருமளவு குறைக்கிறது. ஆகவே இன்று எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் விற்பனையில் வேகமெடுத்து இருக்கின்றன. இது எரிபொருள் செலவை பெருமளவில் குறைப்பதோடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நிலையில் இன்று இது வாகனச் சந்தையை ஆக்ரமித்து வருகிறது.ரயில்களின் கண்டுபிடிப்பு, ஏராளமான பயணிகளை ஒரே நேரத்தில் பயணிக்க வைக்கிறது.இன்றைக்கு அதிநவீனமான ஹைப்பர் லூப்ஆராய்ச்சிகள் முடிவடைந்து, அதை நடைமுறை படுத்தும் பணிகளை துவங்கியுள்ளனர். இதில் மணிக்கு 1000-1200 கி.மீ வேகத்தில் தரைவழியில் பயணிக்கலாம் என்பது பிரமிப்பு.15 நிமிடங்களில் சென்னையிலிருந்து பெங்களூரை அடைந்துவிடலாம் என்கிறார்கள்.இன்றைக்கு வானத்தில் பறந்து செல்லும் விமானங்களில், பலவகையான புதியவகைகள் அறிமுகப் படுத்தப்பட்டு,அவைகள் பயணதூரங்களை மிக விரைவில் அடைய உதவுகின்றன. இன்று வானங்கள்பால் வீதிகள், பால்வெளி மண்டலங்கள், என‌ வானத்தின் மிக அற்புதமான ரகசியங்களை, இந்த சூரியக் குடும்பம் உள்ளபால்வீதியில் இருக்கிற கோள்களைஆராய, இன்று மனிதன் புதியபுதிய விண்கலங்களை அனுப்புகிறான். பூமியின்துணைக்கோளான சந்திரனுக்கு ஆராய மனிதனை, விண்கலங்களை,அனுப்புகிறான். ஆளிலில்லாத விண்கலங்களை ஏவி மனிதன் வாழ சாத்தியமான கோள்கள் இருக்கிறதா? என்று ஆராய்கிறான்.அங்கிருந்து மனிதனுக்கு தேவையான வளங்கள் கிடைக்குமா? என்று தேடுகிறான். இன்று பலவகையான ராக்கெட்கள் வடிவமைக்கப்பட்டு, விண்கலங்களை ஏவ பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் ராக்கெட் அமெரிக்காவின் எடை அதிகமான விண்கலத்தை ஏவுகிறது.பயணங்களுக்கானஇதுபோன்ற ஏராளமான புதிய புதிய வாகனங்கள் காலத்தின் மாற்றங்களின் போது அணிவகுக்கும் என்பதை அறிவித்த திருக்குர்ஆனின் வசனம் ஆச்சரியமானது மட்டுமல்ல ஆராயத் தூண்டுகிற அற்புதமான ஊக்கமும் ஆகும்.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்…! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்…!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!