திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
ஆழ்கடல் அதிசயங்கள்..!
அத்தியாயம் 28
அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை. (திருக்குர்ஆன் 24:40)
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (திருக்குர்ஆன் 6:59)
கடல்களிலும், பெருங்கடல்களிலும், 200 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆழங்களில் இருள்கள் காணப்படுகின்றன. நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் நவீன சாதனங்களின் துணை இல்லாமல் 40 மீட்டருக்கு கீழே மனிதனால் நீரில் மூழ்க முடியாது. ஆழ்கடலில் உள்ள ஆழமான இடங்களில் நவீன கருவிகளின் துணையுடன் கூட மனிதனால் நீந்த முடியாது என்கிறது நவீன கடல் அறிவியல்.கடல் நீரின் மேல்பகுதியில் உள்ள நீரின் அடர்த்தியைவிட, கடலின் ஆழத்தில் உள்ள நீரின் அடர்த்தியால், ஆழ்கடலில் ஏற்படும் உள் அலைகளை ஆழ்கடல் நீரானது மூடிக்கொள்கிறது. கடலின் மேற்பரப்பில் ஏற்படும் அலைகள் மேலெழும்பி தாழ்வாக அலை அலையாக ஏற்படுவதைப்போல,கடலின் ஆழப் பகுதியிலும் ஏற்படுகிறது. ஆழ்கடலில் இதனை நாம் காணமுடியாது. ஆனால் ஏற்படும் வெப்ப மாற்றம், உப்புத்தன்மை மாறுபாடுகளை கொண்டே இதனை அறிய முடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம். ஆழ்கடல் என்பது முழு இருள்.அதிக அழுத்தம் குளிர்ந்த வெப்பநிலை கொண்ட மர்மமான உலகம். சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கடலின் மேற்பரப்பில் பரவுகின்றன. ஒளிக்கற்றைகளின் ஏழு வண்ணங்களும் கடலின் மேற்பரப்பில் படிந்தாலும், அதிலுள்ள நீல நிறத்தை தவிர மற்ற நிறங்கள் ஒன்றன்பிறகு ஒன்றாக 1000 மீட்டர் ஆழம் வரை உறிஞ்சப்படுகின்றன. இறுதியில் ஆழம் செல்ல செல்ல கருமையான இருளாகத்தான் உணர முடியும்.ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கி.மீ ஆக உள்ள ஒளியின் வேகம், கடல் நீருக்கு அடியில் 2,25,000 கி.மீ வேகமாக குறைய இந்த நீரின் அடுக்குகளும், அதன் அடர்த்தியுமே காரணமாகும். கடலில் சூரிய ஒளி ஊடுறுவமுடியாத ஆழங்களில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன.அதில் சிலவற்றையே மனிதன் அடையாளம் கண்டுள்ளான். இன்னும் மனிதன் கண்டேயில்லாத ஆராயப்படாத பயங்கரமான ஏராளமான உயிரினங்கள், கடலின் ஆழப் பகுதியில் வாழ்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆழ்கடல் ஆராய்ச்சி விண்வெளி ஆராய்ச்சியை விட கடினமானது என்கின்றனர் கடலியல் ஆய்வாளர்கள். பைலூமினெசென்ஸ் என்ற ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் ஒளிரும் தண்மைகொண்டவை. அகழிக்கடல் மற்றும் ஹாடல் மண்டலத்திலுள்ள மீன்கள் மற்றும் ஜெல்லி மீன்கள் தங்களுக்குள் பேசவும்,இரையை ஈர்க்கவும் ஒளியை உருவாக்குகின்றன. ஆர்கா போன்ற நுண்ணறிவுள்ள வேட்டையாடும் உயிரினங்களின் வேட்டையாடும் திறனும், அதன் சமூக அமைப்புகளும் ஆழ்கடலில் இருளின் அதிசயங்கள்.ஆஸ்திரேலியாவின் ஆழ்கடலில் உள்ள பவளப்பாறைகள் ஏராளமான கடல் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. பவளப்பாறைகள் உயிருள்ள மிகப்பெரிய கட்டமைப்புகள். மிக அதிக அழுத்தத்தையும், மிகக்குறைந்த வெப்பத்தையும், தாங்கி வாழும் கடல்வாழ் உயிரினங்களும், ஆழ்கடலில் உள்ள கடல்பாசிகளும், முத்து சிப்பிகளும், கடல் சங்குகளும், பலவகை கடல் தாவரங்களும் , சிந்தனைகளை தூண்டுகின்றன. ஆழ்கடலில் உள்ள நீரோட்டங்கள், எரிமலைகள் மற்றும் வெப்ப நீரூற்றுகள், தனித்துவமான சூற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றன. ஆழ்கடலில் இன்னும் 95% ஆராயப்படாமலேயே இருக்கிறது. திருக்குர்ஆன் கூறும் மேலுள்ள வசனங்கள் இந்த ஆழ்கடல் நிலைகளை துல்லியமாக விளக்குவதை கண்டு மிக ஆச்சரியமாக உள்ளது.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு அறிவியல் தகவலை ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









