திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

26.வானில் பல பாதைகள்..!

அத்தியாயம் 26

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக! (திருக்குர்ஆன் 51:7)

சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.(திருக்குர்ஆன் 36:40)

அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன (திருக்குர்ஆன் 21:33)

வானத்தில் பல பாதைகள் உள்ளன என்ற திருக்குர்ஆனின் வசனம் இன்று வானவியலில் ஒரு அற்புத நிரூபணம்.சூரியக் குடும்பம் தனது சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றிவர‌ 25 கோடிஆண்டுகள் ஆகின்றன எனக் கூறப்படுகிறது. வானத்தில் எத்தனை பாதைகள். அத்தனையும் ஆச்சரியம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை.நீள்வட்டமாக செங்குத்தாக பல பாதைகள்.அவை கோள்களின் சுற்றுப்பாதைகள், நட்சத்திரங்களின் இயக்கம், வால்மீன்கள் என்ற வால் நட்சத்திரங்களின்(Comets) பாதை, விண்வெளியில் விமானங்கள், செயற்கை கோள்கள் செல்வதற்கான பாதைகள் என பலவகைகளில் பாதைகள் உள்ளன. ஒவ்வொரு கோளும் சூரியனை ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன.

அதற்கான சிறப்பு நுண்ணோக்கிகளில் ஆராயும்போது, அவை ஒரு அணிவகுப்பு நடத்துவதைப்போலதோன்றும். விண்மீன்திரள்களும்(Galaxies), நட்சத்திரங்களும்,பிரபஞ்ச வெளியில் நகர்ந்து செல்கின்றன.அவற்றின் பாதைகள் சிக்கல் நிறைந்ததாகக் கூறப்படுகிறது. வால் மீன்கள்(comets) சூரியனை நோக்கி பயணிக்கும்போது, நீளமான பாதைகளில் பயணிக்கின்றன.

பூமிக்கு மேலே விமானங்களும், செயற்கை கோள்களும் குறிப்பிட்ட பாதைகளில் (orbits) பயணிக்கின்றன.

மழைத்துளிகளில் சூரிய ஒளி பட்டு சிதறும்போது வானவில் ஏற்படுகிறது. இது ஒளியின் பாதை மாற்றத்தால் ஏற்படும் பாதையாகும்.

2025 ஜனவரி மாதத்தில் வெள்ளி, செவ்வாய்,வியாழன்,சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் இரவில் காட்சி அளித்தன.

2025 பிப்ரவரி 28 ம்தேதி இரவு வானப் பாதைகளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஏற்கனவே ஆறு கோள்கள் வானில் காட்சி அளித்துக் கொண்டு இருந்தன.

அன்று இரவு புதன் கோளும் இணைந்து ஏழு கோள்களின் அணிவகுப்பு வானில் நிகழ்ந்தது.இவைகள் எல்லாம் வானப் பாதைகளின் காரணமாகவே சுற்றி வருகின்றன. நான்கு கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று வானவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். சூரிய உதயத்திற்கு முன்னர் வெள்ளி,புதன் ஆகிய கோள்களை கிழக்கு வானில் பார்க்கலாம். அதிகாலையில் வைர மூக்குத்தி போல் ஒளிரும் வெள்ளி கோளை விடிவெள்ளி என்றும் கூறுவர். கோள்களுக்கு சுயமான ஒளி கிடையாது. பூமியைப் போலவே சூரியனிலிருந்தே ஒளியைப்பெற்றுக் கொள்கின்றன. ஆனால் பால்வீதியிலுள்ள பல நட்சத்திரங்கள் சூரியனை விட மிகப் பெரியதும்,சுயமான ஒளியை கொண்டதுமாகும்.செவ்வாய்,சனி ஆகிய இரண்டு கோள்களையும் சூரியன் மறைந்த பின்னர் மேற்கு வானத்தில் பார்க்கலாம். வானில் தொடர்ச்சியாக வெறும் கண்ணால் நம்மால் ஐந்து கோள்களை மட்டுமே பார்க்க முடியும்.இதில் வியாழன் கோள் பகலில் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அதனை பார்க்க முடியாது.பூமியில் பாதைகள் இருப்பது போல, வானத்திலும் பல பாதைகள் இருப்பதாலேயே இது போன்ற பயணிக்கும் நிகழ்வுகள் சாத்தியம் என்ற விஞ்ஞானிகளின் கூற்றை 1447 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் தெளிவாக கூறிவிட்டது.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை புதியதொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!