திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
24.பால் உற்பத்தி ஒரு ஆச்சரியம்..!
அத்தியாயம் 24
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.அதன் வயிறுகளில் உள்ள சானத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.
திருக்குர்ஆன் 16:66
உலகின் மிக முக்கியமான உணவுப்பொருளான பாலைப் பற்றியும்,
கால்நடைகளில் இருந்து பால் உற்பத்தியாகும் நிலைகளையும், திருக்குர்ஆனின் இந்த வசனம் மிகத்தெளிவாக விளக்குகிறது.
பொதுவாக பால் இரத்தத்திலிருந்தே
உற்பத்தி ஆகிறது என்ற கருத்திலேயே உலகம் பல காலமாக இருந்தது.
ஆனால் திருக்குர்ஆன், இரத்தத்திற்கும்
சாணத்திற்கும் இடையிலிருந்து பால் உற்பத்தி ஆகிறது என்று கூறியதை,இன்றைய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.கால்நடைகள் உணவுகளை உண்டு அவை சிறுகுடலில் செரிக்கப்பட்டு,அதன் சத்துக்கள் ,அமினோ அமிலங்கள்,கொழுப்பு
அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், போன்றவற்றுடன் இரத்தத்தில் கலக்கின்றன. இந்த சத்துக்கள் இரத்தத்தின் வழியாக மடிசுரப்பிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மடிசுரப்பிகளிலுள்ள (Alveoli) எனப்படும் சிறிய பைகள், இரத்தத்திலிருந்து
தேவையான சத்துக்களை பிரித்தெடுத்து தண்ணீருடன் கலந்து பாலை உருவாக்குகின்றன.
சிறுகுடலில் மைக்ரோபியல் என்னும் செல் கட்டமைப்புகளால், உணவு முழுவதும் ஜீரணம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியிலேயே புரதச்சத்துக்களான அமினோ அமிலங்கள், மற்றும் வைட்டமின்கள் உருவாகி நேரடியாக இரத்தத்தில் கலக்கின்றன. பசும்பாலில் vitaminA, B12, தையமின், புரோட்டீன்,கால்சியம்போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இங்கு இரத்தம், கால்நடைகளின் உணவுகளில் செரிக்கப்பட்ட சத்துக்களை ஒரு கடத்தியாக செயல்பட்டு (Carrier) மடிக்கு கொண்டு போய் சேர்த்து பால் உருவாக உதவுகிறது. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் என்ற இந்த திருக்குர்ஆன் வசனம்,
சிறுகுடலில் செறிக்கப்பட்ட கூழுக்கும்,
பெருங்குடலிலுள்ள மலக்குடலில் உள்ள சாணத்திற்கும், இடையில் பால் உற்பத்தியாகும் செயல்முறை(Process) நிகழ்வதை மிகச்சரியாக சுட்டிக்காட்டுகிறது. மேலும் அதன் நன்மைகளையும் குறிப்பாக தெரிவிக்கிறது. இந்த நூற்றாண்டில் கூறப்படுகிற ஒரு கருத்தை திருக்குர்ஆன் 1447 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக கூறிவிட்டது.
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
பாலிலிருந்து ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்றைக்கு பால் பொருட்கள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இப்போதைய பால் உற்பத்தி ஆண்டுக்கு 120 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பரிந்துரைப்படி, ஆரோக்கிய நலவாழ்விற்கு ஒரு நபர் தினமும் 280 கிராம் பாலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 6.5 % பாலின் உற்பத்தியாகும். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி,
தீவனங்கள் உற்பத்தி என இவை சார்ந்த தொழில்கள் கிராம பொருளாதாரத்தை உயர்த்தி எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
பால், அருந்துவோருக்கு மட்டும் இனிமையானதல்ல. கால்நடைகளை பராமரித்து பால் உற்பத்தி செய்பவர்களுக்கும், இனிமையானது என்று விரிவான பார்வையில் புரிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
நாளை மற்றொரு அறிவியல் தகவலை ஆராய்வோம்..!
கப்ளிசேட்

