திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருப்பித்தரும் வானம் என்னும் பாதுகாப்பான முகடு.!
அத்தியாயம் 23
திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! (திருக்குர்ஆன் 86:11)
வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர் (திருக்குர்ஆன் 21:32)
திருப்பித் தரும் வானம் என்று திருக்குர்ஆன் கூறுவதுபோல, ஏராளமான நன்மைகளை வானம் நமக்கு திருப்பித்தந்து கொண்டே இருக்கிறது. கடலில் இருந்தும், நீர்நிலைகளில் இருந்தும், உறிஞ்சுகின்ற நீரை ஆவியாக மேலே எடுத்து சென்று வானம் மழையாக பூமியில் பொழியவைக்கிறது. பூமியிலிருந்து மேலே அனுப்பப்படும் ஒலி அலைகளை வானம் திருப்பித் தருவதாலேயே ரேடியோ மற்றும் வயர்லெஸ் கருவிகள் இயங்குகின்றன. மேல் நோக்கி அனுப்பப்படும் அலைகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. வானவெளியில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள் மூலம், ஒளிபரப்பப்படும் காட்சிகளை பூமியில் காண்கிறோம்.பூமி தனக்கு தேவையான வெப்பத்தை சூரியனிடமிருந்து எடுத்துக்கொள்கிறது. பூமி தனக்கான வெப்பத்தை எடுத்து கொண்டு மீதியை வானத்திற்கே அனுப்பி விடுகிறது. இந்த வெப்பத்தை வானம் சிதறடித்து விடாமல் பாதுகாத்து, பூமிக்கு தேவைப்படும் போது, வெப்பத்தை மீண்டும் பூமிக்கே தருகிறது. நமக்கு மேல் ஒன்றுமே இல்லாமல் தெரியும் போது, வானம் கூரையாக பாதுகாக்கும் ஒரு கவசமாக எப்படி செயல்பட முடியும்? என்று யோசிக்கிறபோது, பல ஆச்சரியங்களை விஞ்ஞானம் வெளிப்படுத்துகிறது.
இந்த செய்திகள் திருக்குர்ஆன் கூறும் வானம் ஒரு பாதுகாப்பு முகடு என்பதை உறுதிப்படுத்துகிறது. சூரியனிலிருந்து வெப்பத்தை பெறும் அருகருகே உள்ள பூமியிலும், சந்திரனிலும் ஒரே அளவு வெப்பநிலை நிலவ வேண்டும்.மாறாக சந்திரனில் பகல் நேர வெப்பநிலை 127 டிகிரிசென்டி கிரேடாக உள்ளது.ஆனால் பூமியில் மிக அதிகபட்சமாக 40-50 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையே நிலவுகிறது. பூமியிலிருந்து 16கி.மீ உயரம் வரை காற்றின் முதல் அடுக்கு உள்ளது.இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கை குறைத்து, சூரியனின் முழு வெப்பமும் பூமியில் படாமல் பாதுகாக்கிறது.இந்த அடுக்கில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் இது கூரை போல செயல்படுகிறது. பூமியிலிருந்து 16-50கி.மீ வரை காற்றின் அடர்த்தி குறைவாக உள்ளதால், இந்த உயரத்திலேயே விமானங்கள் பறக்கிறது. பூமியிலிருந்து 20-35 கி.மீ வரை ஓஸோன் படலம் உள்ளது.சூரியனிலிருந்து வெளியாகும் பல கதிர்வீச்சுகளில் புற ஊதாக் கதிர்கள் சக்திவாய்ந்த உயிர்க்கொல்லியாகும். இந்த புற ஊதாக் கதிர்கள், நேரடியாக உயிரினங்கள் மீது பட்டு உயிரினங்கள் அழிந்து விடாத வகையில் ஓஸோன் படலம் தடுக்கிறது. பூமியிலிருந்து 50-80 கி.மீ வரை நடு அடுக்கு உள்ளது. விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்களும்,வால்நட்சத்திரங்களும் மணிக்கு 43,000முதல் 57,000 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன. இதில் சில விண்கற்கள் 96,000 சதுர கிலோமீட்டர் (சென்னையைப் போல 16 மடங்கு பெரியது) அளவுள்ள பெரிய விண்கற்கள் 50,000 கி.மீ வேகத்தில் வந்து பூமியை தாக்கினால் என்ன நிகழும்? கற்பனையே செய்ய முடியாதல்லவா இப்படி சீறிவரும் விண்கற்களை இந்த நடு அடுக்கு எரித்து சாம்பலாக்கி விடுகிறது. பூமியிலிருந்து 80கி.மீட்டரிலிருந்து 1600 கி.மீட்டர் வரை வெப்ப அடுக்கு உள்ளது.
ஹீலியம், ஹைட்ரஜன் வாயுக்கள் அதிகம் இப்பரப்புகளில் இருப்பதால் வெப்பமாகிக்கொண்டே இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒலி மற்றும் ஒளி அலைகள் இந்த பரப்புகளில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன வானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான பாதுகாப்பு தடுப்புகளை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் இறைவன் தனது திருமறையில் வானத்தை பாதுகாக்கும் முகடு என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!
கப்ளிசேட்

