திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

மனிதன் வாழும் பூமி..!

அத்தியாயம் 22

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதிவாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!

(திருக்குர்ஆன் 7:10)

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்.(திருக்குர்ஆன் 42:29)

பிரபஞ்சம் (Universe)என்பது, காலம்(Time), வெளி(Space), அவற்றுக்குள் இருக்கும் அனைத்து பொருட்களையும், ஆற்றலையும் உள்ளடக்கிய முழுமையான ஒன்று. பிரபஞ்சம் தன்னுள் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள், கருந்துளைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏராளமான பால்வீதிகள்,(milkyways) ஏராளமான விண்மீன்  தொகுப்புகள்,(Galaxies)என்று பரவிக்கிடக்கிற ஒரு விண்மீன் தொகுப்பான கேலக்ஸியில் ஒன்றுதான் சூரியக் குடும்பம். இதில் சூரியனைச் சுற்றி பூமி உட்பட ஒன்பது கோள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு கோள்களிலும், துணைக் கோள்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூரியனிலிருந்து  முதல் கோளாக புதன்(mercury) உள்ளது.இது சூரியனிலிருந்து 5,80,00,000 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. இதன் அதிகபட்ச வெப்பநிலை 480டிகிரி சென்டி கிரேடு  குறைந்த பட்ச வெப்ப நிலை180 டிகிரி சென்டி கிரேடு ஆகும். இங்கு காற்று இல்லை. சூரியனிலிருந்து அடுத்த கோளான வெள்ளி(Venus) 10,08,00,000 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு 457 டிகிரி சென்டி கிரேடு  வெப்பம் நிலவுகிறது. ஆக்ஸிஜன் இங்கு சுத்தமாக இல்லை. அடுத்து கோள் பூமியாகும்.இது சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ தூரத்தில் இருக்கிறது. பூமியில் மட்டும்தான் மனிதன் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு வெப்பமும்,குளிரும் நிலவுகிறது. பூமி சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுற்றுவதாக கூறப்படுகிறது. இதுபோன்று சுற்றுவதால் தான் பருவநிலைகள் மாறி மாறி வருவதாகக் கூறப்படுகிறது. சில கோள்களின் வெப்பமும், சில கோள்களில் நிலவும் குளிரும், காற்றே இல்லாதகோள்களும் விசை அதிகமான கோள்களும் என, பூமியைத் தவிர எந்தக்கோள்களிலும் மனிதன் வாழ முடியாது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. அடுத்த கோள் செவ்வாய் (Mars) உள்ளது.இது சூரியனிலிருந்து 23கோடி கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டி கிரேடு.குறைந்த பட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரி சென்டி கிரேடு ஆகும். பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கும் அதில் ஆக்ஸிஜன் ஒரு சதவீத அளவே உள்ளது. வியாழன்(Jupiter) இது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளாகும். இது சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். நமது எடையே இரண்டரை மடங்கு அதிகரித்துவிடும். நமது எடையையே நம்மால் தாங்கமுடியாது.அடுத்து வரிசையில் சனி(Saturn) உள்ளது.இது அழகான வளையங்களை கொண்ட கோளாக குறிப்பிடப்படுகிறது. இது சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.இங்கு மைனஸ் 143 டிகிரி வெப்பம் நிலவுவதால், குளிரில் உறைந்து போய்விட வேண்டும். அடுத்து யுரேனஸ்(Uranus) சூரியனிலிருந்து 178கோடி கி.மீ தொலைவிலும், அடுத்த நெப்டியூன்(Neptune) சூரியனிலிருந்து  450 கோடி கி.மீ தொலைவிலும் உள்ளது. புளூட்டோ(Pluto) சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த கோள்களில் மிகக்கடுங்குளிர் நிலவுகிறது. ஆகவே இந்த எந்தக்கோள்களிலும் மனிதன் உயிர் வாழ முடியாது. பூமியின் துணைக்கோளான சந்திரனில் பகல் வெப்பம் 127 டிகிரி சென்டி கிரேடும், இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று ஆகியவை இல்லை.இதுபோன்ற நிலையில் பூமி ஒன்று மட்டுமே மனிதன் உயிர்வாழ முடியும் என்ற திருக்குர்ஆனின் கூற்றை இன்றைய அறிவியல் கூறுகிறது. வேறு கோள்களில்  உயிரினங்கள் வாழமுடியுமா? என்ற சாத்தியத்தையும் விஞ்ஞானம் மறுக்கவில்லை.சில கோள்களில் தண்ணீரின் அடையாளங்கள் கிடைத்திருப்பதை வைத்து அறிவியல் அறிஞர்கள் இந்த சாத்தியத்தை மறுக்கவில்லை. வானங்கள் பூமியை படைத்து, இவ்விரண்டிலிம் உயிரினங்களை பரவச் செய்திருப்பது என்ற திருக்குர்ஆனின் வசனம்,வானத்திலும் (பிற கோள்களில்) உயிர்கள் இருக்கலாம் என்றும், அது வானவர்களை குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.ஆனால் பூமியைத் தவிர வேறெங்கும் மனிதன் வாழ முடியாது என்ற திருக்குர்ஆனின் வசனம் உலகிற்கே இன்று வழிகாட்டியாய் இருக்கிறது.

திருகுர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

கப்ளிசேட்

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!