திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
பூமியின் முழு ஆழத்திற்கு செல்ல முடியாது.!
அத்தியாயம் 21
பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!திருக்குர்ஆன் 17:37
திருக்குர்ஆனின் இந்த வசனம் மிக ஆச்சரியமானது. இன்றுவரை பூமியின் ஆழத்தில் மனிதன் சில கி.மீட்டர்களை தாண்டி பயணிக்க முடியவில்லை.பூமியின் மையப் பகுதியை அடையவே முடியாது என்று இன்று புவியியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.பூமியின் மையப்பகுதி 6371 கி.மீட்டர் ஆழத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.பூமியின் மையப் பகுதியை இரண்டு பகுதிகளாக அறியலாம். வெளிப்புற மையப்பகுதி என்பது உருகிய பாறையை உள்ளடக்கிய திரவப் பகுதியாகும். இதனை அடுத்த பகுதியாக உள்புற மையப்பகுதி கனிமவளங்கள் நிறைந்த மேலோடு மற்றும் மேன்டலால் எனும் கடினமான திடப் பகுதியாகும். இந்த உள்புற பகுதியை வெளிப்புற பகுதி முழுவதும் மூடிக்கொள்கிறது. பூமியின் மையப் பகுதியின் சராசரி வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ் ஆகும்.பூமியின் அழுத்தம் 3.6 பில்லியன் ஏடிஎம் (அளவிடும் ஒரு அலகு) என்பதெல்லாம் மனிதர்கள் பயணம் செய்வதை கற்பனை கூட செய்ய முடியாது.பூமியின் மேன்டில் என்று கூறப்படுகிற மேலடுக்கு தோராயமாக 2853.9 கி.மீட்டர் தடிமன்கொண்டது. பூமியின்மையப்பகுதிக்கு பயணிக்க 6371 கி.மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.பூமியின் விட்டம் 12,740 கி.மீட்டராகும்.பூமிக்குள்(கடலிலோ அல்லது மேலோட்டத்திலோ)ஆழம் செல்ல செல்ல அழுத்தம் அதிகரிக்கிறது.5 கி.மீ ஆழம் சென்றாலே அழுத்தத்தை தாங்க முடியாதபோது, பூமியின் மையத்திற்கு 6400 கி.மீட்டர் பயணிக்க எந்த சாதனத்தை பயன்படுத்தியும் முடியாது.1950 ஆம் ஆண்டு அமெரிக்காவும்,ரஷ்யாவும் ஒரு வித்தியாசமான போட்டியை துவங்கின.பூமிக்குள் யார் ஆழமாக செல்ல முடியும்? மேலடுக்கு வரைகூட செல்ல முடியுமா? என்று போட்டியிட்டன.அமெரிக்காவால் இயலாமல் போட்டியில் தொடராமல் விலகிக்கொண்டது.ரஷ்யா, வடக்கு ரஷ்யாவில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து 1970 முதல் 1994 வரை விஞ்ஞானிகளையும்,தொலையிடுபவர்களையும் தங்க வைத்து வேலைசெய்து வெறும் 40,000 அடி ஆழத்தை அடைய 24 ஆண்டுகள் ஆனது.அந்த ஆழத்தில் பாறைகள் பிளாஸ்டிக் போல உருகி ஓடியது.வெப்பம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருந்தது.அதனால் அதற்குமேல் பெரிதாக ஆழம் செல்ல முடியவில்லை.இதுவரை பூமியின் ஆழத்தில் துளையிடப்பட்டு அடைந்த தூரம் தோராயமாக 12.26 கி.மீட்டர் ஆகும்.இதுவே பூமிக்கடியில் துளையிடப்பட்டு அடைந்த அதிகபட்ச தூரமாகும்.15 கி.மீட்டர் இலக்கை அடைய ரஷ்யா முயன்றது.கடுமையான வெப்பம் மற்றும் வாயுக்கள் அடர்த்தியாக வெளியேறியதால் தொடரமுடிய வில்லை.ஜெர்மனியும் பவேரியா என்ற இடத்தில் முயன்று குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் பூமிக்குள்செல்ல முடியவில்லை.கடலில் 4 கி.மீட்டர் ஆழத்தில் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்துகூட யாரும் நிற்க முடியாது.அழுத்தத்தால் நசுக்கப்பட்டு விடுவார்கள்.கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிகக் கடினமாக இருக்கும். உலகில் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கி.மீட்டர்.அங்கு அழுத்தம் 400 மடங்கு இருக்கும்.தென் ஆப்பிரிக்காவில் உள்ள டிரான்ஸ்வால்பாக்ஸ்பர்க் சுரங்கமே மிக ஆழமானது.அது 3.3 கி.மீட்டர் மட்டுமே ஆழமுடையது.இந்த ஆழத்திற்கு மனிதன் பூமிக்கு கீழே சென்றுள்ளான்.இதுபோன்ற ஏராளமான தகவல்களை ஆராய்ந்து பார்க்கும்போது, இமய மலையின் உயரம்9கி.மீட்டர்.இந்த உயரத்தின் அளவிற்கு கூட பூமிக்குள் செல்ல முடியாது என்ற திருக்குர்ஆன் வசனம் ஆச்சரியம் மட்டுமல்ல.அது இறைவனின் வேதம் என்பதற்கான அத்தாட்சியும் ஆகும்.
நாளை மற்றொரு அறிவியல் கருத்தை திருக்குர்ஆனின் ஒளியில் ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’

