திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! வானவெளியில் பறவைக்கூட்டம்..! அத்தியாயம் 20 “ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.” (அல்குர்ஆன் 16:79) பூமி தன்னைத்தானே ஒருநாளில் சுற்றுகிறது.மேலும், சூரியனையும் ஒருவருடத்தில் சுற்றி வருகிறது. பூமி 1,07,000 கி.மீ வேகத்தில் சூரியனை சுற்றும்போது,பூமி வேகமாக நகரும்போது,பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப்பறவைகள் மீது மோதவேண்டும். பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை இருப்பதால் அந்தப்பறவையை சேர்த்து இழுத்துக்கொண்டே பூமி போகிறது. முன்பக்கம் இருக்கிற பறவையை தள்ளிக்கொண்டும், பின்பக்கம் இருக்கிற பறவையை இழுத்துக்கொண்டும் பூமி நகர்கிறது. பேருந்தில் அமர்ந்திருக்கும் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதாக தோன்றினாலும், பேருந்து நம்மை முன்னோக்கி இழுத்துச் செல்கிறது. அதுபோலவே பூமியும் சுற்றிக்கொண்டே பறவைகளை முன்னோக்கி இழுத்துச் செல்கிறது. முன்பக்கம் இருக்கின்ற பறவையை தள்ளாமல் இந்தபூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்கமுடியாது. பூமியில் மோதி செத்துவிடும். அந்தரங்கத்தில் பறக்கும் பறவைகளைப்பற்றி திருக்குர்ஆன் கூறும்போது, அவை ஆகாயத்தில் வசப்படுத்தப் பட்டுள்ளன என்று விவரிக்கிறது. உமது இறைவன்தான் அதனை வசப்படுத்தி இருக்கின்றான் என்றும் திருக்குர்ஆன் விவரிக்கிறது. பறவைகள் வலசை (Bird migration) என்பது மிகப்பெரிய ஆச்சரியம். கடந்த வருடம் சென்ற இடத்திற்கே மீண்டும் செல்வது தொடங்கி, குச்சிகளை குறுகிய அலகுகளால் கூடுகட்டும் மேஸ்திரி வேலைவரை யாரும் அதற்கு கற்றுக்கொடுப்ப தில்லை. கண்டம் விட்டு கண்டம் நெடுந்தொலைவு பறக்கும் பறவைகள், கடல் தாண்டியும் பறக்கும் பறவைகள், ஒரு ஒழுங்குமுறையோடு பறக்கின்றன. முன்னாள் செல்லும் பறவை,தன்சிறகை காற்றில் அடிக்கும்போது, அதற்குப் பின்னால் காற்று கீழ்நோக்கிச் செல்லும். பக்கவாட்டு பக்கங்களில் காற்று மேல்நோக்கிச் செல்லும். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு சுழற்சி முறையில் சுழலும் அந்தக்காற்று, அதற்குப் பின்னால் தனது பக்கங்களில் பறக்கும் பறவைக்கு எளிமையானதோர் உந்துவிசையைக் கொடுக்கும்.அந்த உந்துவிசை பின்செல்லும் பறவைக்கு பறப்பதை சுலபமாக்கி விடும். பறக்கும் சமயங்களில் பறவைகளின் இறகுநுனி கிட்டத்தட்ட ஒரு சென்ஸார் போலவே செயல்படும். வரிசையில் செல்லும் பறவை வரிசையை விட்டு பிரிந்தால், அது காற்றின் தன்மையை புரிந்து கொண்டு முன்செல்லும் பறவையின் சிறகசைப்புகளுக்கு முற்றிலும் எதிர்திசையில் அடிக்கத்துவங்கும். இது காற்றின் வேகத்தால் வரிசை அமைப்பை விட்டு பிரிந்து செல்லாமல் இருக்க உதவுகிறது. பிறகு அது தன்னை சமாளித்து சரிசெய்து கொள்ளும். முதல் முறையாக பறக்கும் அந்த இளம் பறவைகளுக்கு திசையையும், வேகத்தையும், செல்லும் இடத்தையும் யார் கற்றுக் கொடுத்தது? முன்பறக்கும் பறவை சோர்வடைந்தால் பின்வரிசை பறவை ஒன்று முன்சென்று வழிநடத்த, அந்தப்பறவை பின்வரிசைக்கு வந்துவிடும். காற்றை சாதகமாக்கிக் கொள்ளவே பறவைகள் ஒரே அணியாகப் பறக்கின்றன. தலைகீழ் “V”ஐபோன்ற வடிவமைப்பில் பறக்கின்றன. இதுபோல பறவைகளின் பறத்தலும்,இடம்பெயர்தலும், வருடம் வருடம் வலசை போவதும், பருவநிலை மாறும்போதும் மீண்டும் தனது பகுதிக்கு வருவதும், இவையெல்லாம் (Basic Instinct) என்ற அதன் ஜீன்களில் பதிய வைக்கப்பட்ட செய்திகளாகும். பறவைகளின் ஆச்சரியங்களை பேசிக்கொண்டே இருக்கலாம். பறவைகளை ஆகாய வெளியில் வசப்படுத்தலும், அந்தரத்தில் பறப்பதும் திருக்குர்ஆனின் வசனங்களின் மூலம் இந்த நிகழ்வுகள் மனிதனுக்கு மேலும் ஆராய பல வழிகளை திறக்கிறது. திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்…! நாளை புதியதொரு செய்தியை ஆராய்வோம்..! ‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!