திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

சிதறும் பிரபஞ்சம்…!

அத்தியாயம் 16

“நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்.பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைவரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்.” (அல்குர்ஆன் 13:2)

இந்த திருக்குர்ஆன் வசனம் ஏராளமான செய்திகளை தெரிவிக்கிறது. பார்க்கும் தூண்களற்ற வானம், இறைவனின் கட்டுப்பாட்டிலுள்ள சூரியனும், சந்திரனும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஓடி பிறகு அழிந்துவிடும். அர்ஷின் மீதமர்ந்து நிர்வகிக்கிறான் என்பது நவீன நிர்வாகவியல் சூத்திரம். தனது சந்திப்பை உறுதியாக நம்புவதற்காக‌ சான்றுகளை தெளிவாக்குகிறான். ஓடிக்கொண்டிருக்கும் சூரியனும்,மற்ற எல்லாக் கோள்களும் குறிப்பிட்ட காலம்வரை ஓடிக்கொண்டிருக்கும் என்று திருக்குர்ஆன் பலவசனங்களில் தெரிவிக்கிறது.

பூமி தட்டையாக இருக்கிறது என்று ஒரு காலத்தில் மனிதன் நம்பினான்.பிறகு உருண்டையாக இருப்பதாக நம்பினான்.

இந்த பிரபஞ்ச குடும்பத்தின் மையப்பகுதி பூமிதான் என்றும், பூமியை சூரியன் சுற்றி வருவதாக நம்பினான். பிறகு சூரியனை பூமி சுற்றிவருகிறது. சூரியன் அப்படியே நிலையாக இருக்கிறது என்றான். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பிற்கு பிறகே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒருநாள் என்றும், பூமி சூரியனை சுற்றிவருவதற்கு ஒருவருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இதுபோல் சூரியனை சுற்றும்போது, சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு தனது குடும்பத்தின் எல்லாக் கோள்களையும், இழுத்துக்கொண்டு மணிக்கு சுமார் 8,28,000 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை இதுபோல நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் என்ற செய்தி மிக ஆச்சரியமானது. ஐரோப்பிய விண்வெளிஆய்வு நிறுவனம் மூலம் Gகையா(Gaia spacecraft) விண்ணில் ஏவப்பட்டது. இது வான்வெளியில் உள்ள கோள்களின் தூரம்,வேகம்,காலம்,வயது ஆகியவற்றை ஆராய்ந்து பலதகவல்களை அனுப்பியுள்ளது.

இதனை ஒப்பாய்வு செய்த விஞ்ஞானிகள் சூரியன்4.57 பில்லியன் ஆண்டுகள் ஆகி நடுத்தர வயதில் உள்ளது.சூரியனின் வயது பத்து பில்லியன் ஆண்டுகள்.

சூரியன் 8 பில்லியன் ஆண்டுகள் வரை அதன் வெப்பத்தை வெளிச்சத்தை வெளிப்படுத்தும். அதன்பிறகு குளிர்ந்து அதன் அளவு பெரிதாகி சிவப்பு ராட்சத நட்சத்திரமாகி 10 பில்லியன் ஆண்டுகளில் உயிரிழந்துவிடும் என்கின்றனர். நட்சத்திரத்தின் உட்பகுதியிலிருந்து பிரயோகிக்கப்படும் ஈர்ப்புவிசையும், மேற்பரப்பு அமுக்கமும்(Nuclear fusion)சமமாக இருப்பதால் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திரத்திலுள்ள ஹைட்ரஜன் வாயு முடிவடைந்து விடுவதால் பல மாற்றங்களுக்கு பிறகு நட்சத்திரங்கள் பெரிதாகி இறுதியில் வெடித்து தங்கள் ஆயுளை முடித்துக்கொள்ளும் என்று இன்றைய ஆய்வுகள் அறிவிக்கின்றன.

இதுபோல உலகின் எல்லாப் பொருள்களும், அழிந்து உலகம் இறுதிநாளை அடையும்.

இதுபோன்ற பல அறிவியல் அத்தாட்சிகள் வெளிப்பட்டு இறைவனின் வல்லமையை புரியும் போது அவனிடம் மனிதன் முழுவதும் சரணடைந்து விடுவான்.

அல்லாஹ்வே அர்ஷின் மீது அமர்ந்து நிர்வகிக்கிறான் என்ற வசனம், உலகின் எல்லா இயக்கங்களும், கணக்கீடுகளும்,அதனைச் சார்ந்த நிர்வாகங்களினால்தான் சீராக நடைபெறும் என்ற புரிதலையும் ஏற்படுத்துகிறது.

திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..!

மேலும் நாளை ஒருபுதிய செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!