திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

புவிஈர்ப்பு விசை..!(gravitational force)

அத்தியாயம் 15

“வானங்களும், பூமியும், இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால், அவனன்றி எவரும் அவற்றை தடுத்த நிறுத்த முடியாது.அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும், மன்னிப்பவனாகவும்
இருக்கிறான்.” (அல்குர்ஆன் 35:41) இன்னும் சில வசனங்கள் 13:2,31:10,22:65

திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் நிறைய ஆராயத் தூண்டுகிறது.

வானமும்,பூமியும் இடம் பெயராதபடி தடுக்க வேண்டுமானால் ஏதோ ஒருவகை பிணைப்புகளோ, தூண்களோ இருக்க வேண்டும்.

“வானத்திற்கும், பூமிக்கும் ‌தூண்கள் உண்டு.ஆனால் அதனை நம்மால் பார்க்க முடியாது என்பதே இவ்வசனங்களின் உள்ளீடாகும். சூரியப்
பாதையிலுள்ள பூமி உட்பட எல்லாக்கோள்களும் அவற்றின் பாதைகளில் நீந்தி பயணிப்பதற்கு, அவற்றை குறிப்பிட்ட வேகங்களில் இழுத்துப்பிடித்து இருக்கின்ற ஒருஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவி இருப்பதுதான் காரணம். உதாரணமாக நாம் வாழும் பூமி, மணிக்கு 1670 கி.மீ வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது. அதே சமயம் சூரியனை 1,07,000 கி.மீ வேகத்தில் சுற்றி‌வருகின்றது. இவ்வளவு வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் பூமி சுற்றும்போதே, அவைகளை இழுத்துப் பிடிக்கக்கூடிய ஒரு சக்தி இல்லாவிட்டால் அதன் நீள்வட்ட பாதையில் இருந்து பூமி தூக்கி வீசப்பட்டு விடும். பூமியின் எடை 6‌,000,000,000,000,000,000,000,000 கி.கிராம் என்று மதிப்பிடப்படுகிறது. (என்ன…தலை.. சுற்றுகிறதா..?) இவ்வளவு எடையுள்ள பூமி, இவ்வளவு வேகத்தில் தன்னையும்சுற்றிக்கொண்டு,
சூரியனையும் சுற்றுகிறது என்றால்
ஒரு வலுவான பிணைப்போ, விசையோ இருக்கவேண்டும். பல லட்சம் கோடி குறுக்களவுகள் கொண்ட உருக்குக்‌கம்பிகளை கொண்டு பூமியிலிருந்து சூரியனையும் அதன் சுற்றுக் கோள்களையும் இணைக்க முயற்சித்தாலும் அது முடியாது என்பதே இப்போதைய விஞ்ஞானத்தின் நிலை. திருக்குர்ஆன் கூறுகிறபடி, “நீங்கள் பார்க்கிற தூண்களின்றி ” என்ற சொற்கள் மூலம் அதுவே புவியீர்ப்பு விசை என்ற புரிதலை நாம் அடைய முடிகிறது. இந்த விசையினால்தான் சூரியப் பாதையின் எல்லாக் கோள்களும் அந்தரத்தில் அதனதன் பாதைகளில் நீந்தி வருவது ஆச்சரியம். இதை அறிவியல் என்பதையெல்லாம் நமக்கு புரிதலுக்காக சொல்லிக் கொண்டாலும், குர்ஆனின் வசனமே நமக்கான புரிதலை வழங்குகிறது. 17,ஆம் நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த “புவியீர்ப்பு விசை” “பார்க்கமுடியாத தூண்களற்ற வானம்” என்ற திருக்குர்ஆன் வசனத்தை உண்மைப் படுத்துகிறது. புவியீர்ப்பு விசையின் விதிகளை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. புவியீர்ப்பு விசை என்பது இயற்கையாக பொருட்கள் ஒன்றையொன்று கவர்ந்து கொள்ளும் விசையாகும். பேரண்டத்தில் உள்ள ஏதேனும் இருபொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு விசையாகும். இந்தவிசை பேரண்டத்தில் நெடுந்தொலைவிற்கு செயல்படக்கூடியது. ஈர்ப்பு விசை பிரிந்திருக்கும் பொருட்களை ஒன்று சேர்ப்பதற்கும், ஒன்று சேர்ந்த பொருட்கள் அப்படியே இருப்பதற்கும், உதவுகிறது. அதனாலேயே பூமி,
சூரியன் மற்றும் பிரபஞ்சத்திலுள்ள
அனைத்து பொருள்களும் சரியான திசைகளில் நகர்கிறது என்ற அறிவியல் கூற்று, அப்படியே அச்சுபிசகாமல் திருக்குர்ஆனின் கூற்றோடு பொருத்திப் போகிறது.

திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..!

நாளை மற்றொரு புதிய செய்தியை
ஆராய்வோம்..!

கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!