திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
நீருக்குள் பிரசவம்..!
அத்தியாயம் 14
‘கப்ளிசேட்’
“கவலைப்படாதீர்! இறைவன் உமக்கு கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்! (அல்குர்ஆன் 19:24)
நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்கிறது மருத்துவ இயல். இதனையே திருக்குர்ஆனும் கூறுகிறது.
ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக்கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் நடைபெறும் பிரசவம் எளிதாக நடைபெறுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது. குழந்தை கருப்பையில் நீருக்குள் மிதந்தபடிதான் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறும்போது, குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளிவருகிறது. குழந்தைக்கு இது இயல்பானதாக இருக்கிறது. குழந்தை குளிர்நீரில் பிறப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. ரஷ்ய மருத்துவமனைகளில் பிரசவத்திற்கென தனிநீச்சல் குளங்கள் நீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. இன்று மெட்ரோ நகரங்களில் நீரில் பிரசவங்கள் பரவலாக பிரபலமடைந்து வருகிறது. நீரில் பிரசவமுறை 200ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்துள்ளது. 1803 ஆம் ஆண்டு பிரான்சில் ஒரு பெண்ணிற்கு 48 மணிநேரமாக வலி இருந்தும் பிரசவிக்க முடியவில்லை. மருத்துவரின் ஆலோசனையின்படி, நீரில் குளித்தார் உடனடியாக குழந்தை பிறந்தது. அப்போது இருந்து நீரில் பிரசவமுறை பயன்படுத்தப் படுகிறது. நீர் பிரசவத்தில் தாய் நீரில் மூழ்கிக்கொண்டே இருப்பதால் பிரசவ வலியும்,பிரசவ சிக்கல்களும் பெருமளவு குறைகிறது. வெவெதுப்பான நீரில் பிரசவம் நடைபெற்றால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். நரம்புகளை இது அமைதிபடுத்துகிறது. இது எண்டோர்பின் என்னும் ஹார்மோனை அதிகம் சுரக்க வைக்கிறது. ஆகவே பிரசவவலி மேலும் குறைகிறது. தண்ணீரில் இருக்கும் போது உடலில் ஒருநெகிழ்வுத் தன்மை ஏற்பட்டு உடல் அமைதியாகிறது. தண்ணீருக்குள் ஏற்படும் விசையால் குழந்தை பிறப்பு எளிதாகிறது. இது மருத்துவ உலகில் “புயோயண்ட் விளைவு”(Buoyant Effect) என்றும் அழைக்கப்படுகிறது. தண்ணீர் பிரசவத்தை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு மிகுந்த மன திருப்தி ஏற்படுகிறது. வயிற்றுப் பகுதியை மென்மையாக்கி தாயின் பெரிய உழைப்பில்லாமல் எளிதாக குழந்தை பிறந்துவிடுவதால் இதில் அதிகம் ரத்தப்போக்கு ஏற்படுவதில்லை. குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியுலக நீர்ப்பரப்பிற்கு மாறும்போது குழந்தையும் வசதியாக வெளிவருகிறது. அனுபவமுள்ள நல்ல மருத்துவ செவியர்குழு சிறப்பான முறையில் நீர்பிரசவத்தை (water Birth) மேற்கொள்ளலாம். இதுபோன்று நீரில் பிரசவிக்கும் போது குழந்தைக்கு காயங்கள் ஏற்படுவதில்லை. பெண்களின் உறுப்பு கிழியும் வாய்ப்பும் குறைகிறது. மர்யமின்(அலை) காலுக்கடியில் நீர் ஊற்றை ஏற்படுத்திய இறைவன், கீழே இருந்து வானவர் அழைத்தார் என்ற திருக்குர்ஆனின் கூற்றுப்படி, நீருக்குள் அமர்ந்து கொள்ள அழைத்தார் என்ற கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்.!நாளை மற்றொரு புதிய செய்தியை ஆராய்வோம்..!
கப்ளிசேட்’

