மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவி மர்சூக் பானு குமுறல்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயாகுளத்தில் உள்ள சமுதாய கூடத்தில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் தில்லையேந்தல் பனையடியேந்தல் மேலமடை வேளானுர் மாயாகுளம் உட்பட சுற்று வட்டாரத்திலுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு மனுக்கள் வழங்கினர் முகாமில் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவி மர்சூக் பானு மனு வழங்கி தெரிவிக்கையில் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 24 கிராமங்களுக்கு துணைத் தலைவியாக இருப்பதால் இங்கு அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர் குறிப்பாக குடிதண்ணீர் பிரச்சனை நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருகிறது பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் மனுக்கள் வாயிலாக தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் பாதாள சாக்கடை திட்டம் தெரு விளக்கு 100 நாள் வேலை திட்டம் போன்று அரசு கொடுக்கக் கூடிய சலுகைகள் அன்றாட ஏழை மக்களுக்கு முறையாக வந்து சேர்வதில்லை என்றும் குற்றச்சாட்டும் தெரிவித்தார். முதலமைச்சர் அறிவிக்கிற திட்டங்கள் எதுவும் முறையாக மக்களை போய் சேர்வதில்லை என்றும் வருத்தத்தையும் தெரிவித்தார். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்ற நோக்கத்தோடு அனைத்து குறைகளையும் மனுக்களாக முகாமில் வழங்க வந்துள்ளேன் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் கிராமத்திற்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என்று வருத்தத்தோடு வேதனையோடும் வேண்டுகோள் விடுத்தார்.
You must be logged in to post a comment.