இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 111 வது ஜெயந்தி, 56 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைத்தறி மற்றும் துணி துறை அமைச்சர் ஓ எஸ் மணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் அரசு சார்பில் 30.10.18 (செவ்வாய்) காலை 8:30 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். காலை 10 மணி பாஜக 10: 15மணி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்வி அறக்கட்டளை, 10:30 மணி திமுக, 10:45 மணி மதிமுக, 11 மணி காங்கிரஸ், 11:15 மணி மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 11 30 மணி அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், 11: 45 மணி அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் , மதியம் 12:OO மணி பாட்டாளி மக்கள் கட்சி, 12: 15 மணி் தேமுதிக 12: 30மணி தமாகா 12 45 மணி அமமுக, 1:00 மணி பசும்பொன் கழகம், 1:15 மணி அகில இந்திய பார்வர்ட் பிளாக் (வல்லரசு ) , 1:30 மணி சமாஜ்வாடி பார்வர்டு பிளாக், 1: 45 மணி அகில இந்திய பார்வர்டு பிளாக், மதியம் 2 மணி முக்குலத்தோர் புலிப்பட, 2:15 மணி ஜனநாயக பார்வார்டு பிளாக் கட்சியினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
பின்னர் மாலை 4 மணி அளவில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மாரி வரவேற்கிறார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைக்கிறார் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஓ எஸ் மணியன், உதயகுமார், மணிகண்டன், கதர் பாஸ்கரன் ஆகியோர் வழங்குகின்றனர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா, முதுகுளத்தூர் சட்டசபை உறுப்பினர் பாண்டி, திருவாடனை சட்டசபை உறுப்பினர் கருணாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை நன்றி கூறுகிறார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










